கறிவிருந்து போட்ட இளம்பெண்ணை கொலை செய்த உறவினர்கள்: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Thursday,December 26 2019]

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இளம்பெண் ஒருவரின் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த உறவினர்கள் அவர் போட்ட கறி விருந்தையும் சாப்பிட்டுவிட்டு அவரை கொலை செய்து நகைகளை பறித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் அருகே உள்ள சுட்டகுண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவதி திருமணம் முடிந்து நான்கே ஆண்டுகளில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்தார். அதன் பின்னர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இவரது வீட்டிற்கு சித்ரா மற்றும் செல்வராஜ் ஆகிய உறவினர்கள் விருந்தினராக வந்தனர். விருந்தினரை உபசரிக்க வேண்டும் என்பதற்காக கறி விருந்து போட்டார் சித்ரா. இந்த நிலையில் கணவரிடம் செல்போனில் பேசுவதற்காக அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். அந்த பகுதியில் டவர் கிடைக்காது என்பதால் அவர் சிறிது தூரம் நடந்து சென்று காட்டு பகுதியில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த விருந்தினர்கள் சித்ரா மற்றும் செல்வராஜ், ரேவதியை கொலை செய்து அவர் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை மற்றும் கையிலிருந்த செல்போனையும் திருடி விட்டுச் சென்று விட்டனர். இந்த நிலையில் செல்போன் பேச சென்ற ரேவதியை காணவில்லை என அவருடைய உறவினர்கள் தேடும்போது காட்டுப்பகுதியில் அவர் பிணமாக இருந்ததும் அவர் கழுத்தில் காயம் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த கொலைக்கு காரணம் சித்ரா மட்டும் செல்வராஜ் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர். கறி விருந்து போட்ட உறவினரை கொலை செய்த 2 பேரும் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

More News

சூரிய கிரகணம், கர்நாடகாவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை மண்ணில் புதைத்து வைத்து மூட நம்பிக்கை வழிபாடு..! வீடியோ.

இன்று நிகழ்ந்த நெருப்பு வளைய சூரியகிரகணத்தின் போது 10 வயதுக்குட்பட்ட சில சிறுவர்களை அவர்களது குடும்பத்தினரே கழுத்துவரை மண்ணில் புதைத்து வைத்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

ஆண்ட்ரியாவை காதலித்து ஏமாற்றிய நடிகர்-அரசியல்வாதி யார்? அவரே அளித்த விளக்கம்

நடிகை ஆண்ட்ரியா ஒரு புத்தகம் எழுதி இருந்ததாகவும் அந்த புத்தகத்தில் அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை காதலித்ததாகவும், ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்ததாகவும்,

சுனைனாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா? அவரே அளித்த பதில்!

தனுஷ், மேகாஆகாஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய 'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த சுனைனாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது

எளிமை என்றைக்குமே வரவேற்பைப் பெறும்: த்ரிஷா கூறிய உதாரணம்

கடந்த ஆண்டு விஜய் சேதுபதியுடன் த்ஷா நடித்த '96' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்றும் அந்த படத்தில் இடம்பெற்ற ராம், ஜானு ஆகிய கேரக்டர்கள் படம் பார்த்த

"கொடநாடு எஸ்டேட் என்னுடையது".. வருமான வரித்துறையிடம் தெரிவித்த சசிகலா.

கொடநாடு எஸ்டேட்டுக்கு தாமே உரிமையாளர் என்று வருமான வரித்துறையிடம் சசிகலா தெரிவித்துள்ளார்.