close
Choose your channels

இளம் நடிகையின் வேறலெவல் கிளாமர் புகைப்படம்… ஷாக்கான ரசிகர்கள்!

Saturday, September 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை வைபவி சாண்டில்யா. இவர் தமிழ் சினிமாவில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் ரசிகர்கள் இவருடைய கிளாமருக்காக இவரை நியாபகம் வைத்திருக்கின்றனர்.

கடந்த 2015 முதல் மராத்தி மொழி சினிமாக்களில் நடித்து பிரபலமான இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான “சக்கப்போடு போடு ராஜா” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால் இந்தத் திரைப்படத்தில் நடிகை வைபவி சாண்டில்யாவை கவனிக்காத ரசிகர்கள் “இருட்டு அறையில் முரட்டு குத்து“ திரைப்படத்தில் நன்றாகவே கவனிக்கத் துவங்கி இருந்தனர்.

பின்னர் அதே இயக்குநர் சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான “கேப்மாரி” திரைப்படத்திலும் நடிகை வைபவி சாண்டில்யா நடித்து இருந்தார். இதையடுத்து இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ள “சர்வச் சுந்தரம்” திரைப்படத்திலும் இவர் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள கிளாமர் புகைப்படம் தற்போது கவனம் பெற்றிருக்கிறது. நீண்ட வெள்ளை நிற கோட் மாடல் உடையை அணிந்து இருக்கும் நடிகை வைபவி பால்கனியில் நின்று கொண்டு படு கிளாமராக போஸ் கொடுக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.