முன்னாள் காதலியின் புகைப்படங்களை பேஸ்புக்கில் போட்ட வாலிபர் கைது

  • IndiaGlitz, [Monday,August 14 2017]

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை அவரது முன்னாள் காதலர் திருமணத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததால் கைது செய்யப்பட்டார்.

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவருக்கும், அந்தோணி ராஜேஷ்குமார் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர்களும் ஒப்புக்கொண்டனர். ஆனால் அந்தோணி குறித்து விசாரித்து பார்க்கும்போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது என்பதும், அவருக்கு குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு தயாராகினர். இந்த நிலையில் திருமணத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் அந்தோணி, மணப்பெண்ணின் புகைப்படங்களை, அவருடைய சம்மதம் இல்லாமல் ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார். இதுகுறித்து மணப்பெண்ணின் குடும்பத்தினர் செய்த புகாரின் அடிப்படையில் அந்தோணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

More News

'முடியாது' என்ற வார்த்தையே அஜித்திடம் இருந்து வந்ததில்லை. சிவா

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருசில திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கிவிட்டது...

தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்வோம். நளினி சிதம்பரம் உறுதி

தமிழகத்தை சேர்ந்த மருத்துவம் படிக்கவுள்ள மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு ஆளும் அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன...

விஐபி 2' படத்தின் 3 நாள் தமிழக வசூல் நிலவரம்

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படத்தின் சென்னை ஓப்பனிங் வசூல் திருப்தியாக இருந்தது என்று வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம்...

காயத்ரிக்கு எதிராக திரும்பும் ஒட்டுமொத்த பிக்பாஸ் குடும்பம்: அதிரடி திருப்பம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று காயத்ரிக்கு ஆதரவாக இருந்த ஒரே நபரான சக்தி வெளியேற்றப்பட்டார்...

சிவாஜிகணேசன் சிலை மற்றம்; நடிகர் சங்கம் செயற்குழு புதிய தீர்மானம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சிலையாக அல்ல, ஒவ்வொரு நடிகனின் அசைவிலும் குரலிலும் இன்னமும் தன் தாக்கத்தால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் திரையுலகத்திற்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் சொந்தமானவர் கலாச்சார குறியீடாக விளங்குகின்றவர்...