என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை காதலித்த காய்கறி வியாபாரி: மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Sunday,August 02 2020]

தர்மபுரி அருகே இளைஞர் ஒருவர் பெங்களூருவில் காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில் அங்குள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்ததாகவும், இந்த நிலையில் திடீரென மர்மமான முறையில் அவர் மரணம் அடைந்ததாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தர்மபுரி மாவட்டம் ஓட்டர்திண்ணை என்ற கிராமத்தைச் சேர்ந்த விஜி, பெங்களூரில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். அங்குள்ள இன்ஜினியரிங் கல்லூரி மாணவியும் உறவுக்கார பெண்ணுமான ராஜேஸ்வரி என்பவரை அவர் காதலித்து வந்ததாக தெரிகிறது

இந்த காதலுக்கு ராஜேஸ்வரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை முடித்து மறுநாள் ஊருக்கு வந்த நிலையில் இதுகுறித்த பஞ்சாயத்து அந்த கிராமத்தின் பெரியவர்கள் முன்னிலையில் நடந்தது. அப்போது மூன்று மாதத்தில் முறைப்படி பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றும் அதுவரை ராஜேஸ்வரி அவரது பெற்றோர் வீட்டில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது

இந்த நிலையில் ஊரடங்கை காரணம் காட்டி ராஜேஸ்வரியின் குடும்பத்தினர் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் ஊரடங்கு காரணமாக காய்கறி வியாபாரம் செய்ய முடியாமல் விஜியும் சிக்கலில் இருந்து உள்ளார். இந்த நிலையில் ராஜேஸ்வரியை தன்னுடன் அனுப்புமாறு விஜி அவரது பெற்றோரிடம் வலியுறுத்தியதாகவும், காய்கறி வியாபாரத்தை விட்டுவிட்டு தன்னுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்தால் ராஜேஸ்வரியை அனுப்புவதாக அவரது தந்தை கூறியதாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து பெங்களூரிலிருந்து சொந்த ஊர் வந்த விஜி, திடீரென மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது உடல் சாலையோரம் அரை நிர்வாண நிலையில் இருந்ததாகவும் அவரது மர்ம உறுப்புகள் பயங்கர சேதம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜேஸ்வரியின் பெற்றோர் உள்பட இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள பலரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். என்ஜினியரிங் கல்லூரி மாணவியை காதலித்த காய்கறி வியாபாரி மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

தேர்தல் முன்விரோதம் காரணமாக பயங்கர கலவரம்: வீடுகள், படகுகள் தீவைக்கப்பட்டதால் பரபரப்பு

தேர்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் சகோதரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை அடுத்து கடலூர் அருகே 25க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் வீடுகள் தீ

சென்னையில் ஆகஸ்ட் 31 வரை 144 தடை உத்தரவு: காவல்துறை ஆணையர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆறாம் கட்ட ஊரடங்கு முடிவடைந்து இன்று முதல் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆரம்பமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

6 வயது சிறுவன் படுகொலை: சகோதரியின் அதிர்ச்சி வாக்குமூலம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுவன், மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவத்தில் சிறுவனின் சகோதரி கூறிய திடுக்கிடும் வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஜோதிகா, சிம்ரன், கைரா அத்வானி: 'சந்திரமுகி 2' படத்தின் நாயகி குறித்து ராகவா லாரன்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கிய 'சந்திரமுகி' திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 15 ஆண்டுகள் கழித்து

சும்மா உட்கார்ந்து கொண்டே லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியுமா? ஒரு ஆச்சரிய வீடியோ!

கஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்தால் கூட ஆயிரக்கணக்கில் தான் வருமானம் வரும் என்ற நிலையில் இரண்டு மணி நேரம் சும்மா உட்கார்ந்திருந்த ஒருவர் லட்சக் கணக்கில் சம்பாதித்த தகவல்