close
Choose your channels

பி.பி.ஓ வேலையைவிட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம். டெல்லி இளைஞரின் புதிய அனுபவம்

Monday, April 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய தலைநகர் டெல்லியில் பி.பி.ஓ நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இளைஞர் ஒருவர் தினமும் அலுவலகம் செல்லும்போது ஏராளமான பிச்சைக்காரர்களை பார்த்துள்ளார். அப்போது அவருக்கு பிச்சைக்காரர்களுக்கு ஒருநாளைக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்ற கேள்வி மனதில் எழுந்துள்ளது. உடனே தனது நண்பர்களின் உதவியோடு பிச்சைக்காரராகவே மாறி அதனை தெரிந்து கொள்ள அவர் முடிவு செய்தார்.

பிச்சைக்காரர் போன்றே கிழிந்த அழுக்கு சட்டை மற்றும் அலங்கோலமான நிலையில் பிச்சை எடுக்க களத்தில் இறங்கினார். அவரது சட்டையில் ஒரு கேமிராவும் ரகசியமாக இணைக்கப்பட்டிருந்தது. இரண்டு மணி நேரம் பிச்சை எடுத்த அவருக்கு ரூ.200 கிடைத்துள்ளது. இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.30,000 வரை பிச்சைக்காரர்களுக்கு வருமான கிடைக்கும் என்பதை அவர் தெரிந்து கொண்டார். ஆனால் அவர் பிபிஓவில் வாங்கும் சம்பளம் ரூ.15,000 என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இதுகுறித்த வீடியோ ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக மிக வேகமாக பரவி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.