தலைமறைவாகவுள்ள யூடியூப் மதன் மனைவி கைது: போலீஸார் தீவிர விசாரணை!

  • IndiaGlitz, [Wednesday,June 16 2021]

மதன் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சிறுவர், சிறுமிகளிடம் விளையாடியதாகவும் அப்போது அவர் சிறுவர் மற்றும் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இது குறித்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மதன் மீது புகார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாகினர்.

இந்த நிலையில் திடீரென யூடியூப் மதன் தலைமறைவானார். இதனை அடுத்து தனிப்படை அமைத்து மதனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதனின் யூடியூப் சேனல்களுக்கு அவருடைய மனைவி கிருத்திகா தான் நிர்வாகி என்பது தெரியவந்தது

இதனை அடுத்து மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேலத்தில் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்த பின் அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. யூடியூப் மதன் மனைவி கிருத்திகாவின் கைதை அடுத்து மதனையும் விரைவில் கைது செய்வோம் என்று காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

கொரோனாவுக்கு மகனை இழந்த நடிகை: தீவிர சிகிச்சை பிரிவில் கணவர்!

தமிழ் நடிகை ஒருவரின் மகன் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து அவரது கணவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

இது ஹேட் சீசன்: தொப்பி மட்டுமே ஆடையாக அணிந்து காட்சியளித்த பிரபல நடிகை!

தலைக்கு போடும் வெறும் தொப்பி மட்டுமே ஆடையாக அணிந்து 'இது ஹேட் சீசன்' என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஒருவர் புகைப்படம் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமைச்சரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி...! சிக்குவாரா மாஜி மணிகண்டன்....!

நடிகை சாந்தினி வழக்கில், மாஜி அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமின் வழக்கை  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

காதலருடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்திய தமிழ் நடிகை கைது!

சமீபத்தில் வெளியான “மிருகா“ திரில்லர் திரைப்படத்தில் நடித்து இருந்தவர் நடிகை நைரா ஷா. இவர் காதலருடன் சேர்ந்து போதைப்பொருள்

சிவசங்கர் பாபா பள்ளியின் அங்கீகாரம் ரத்தா? தமிழக அரசுக்கு குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரை!

சென்னை அருகே கேளம்பாக்கம் என்ற பகுதியில் சிவசங்கர் பாபா நடத்திவரும் சுசில்ஹரி சர்வதேச பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நல ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது