close
Choose your channels

'மாவீரன்' படத்தில் இணைந்த பிரபல யூடியூபர்: சிவகார்த்திகேயன் தங்கை கேரக்டரா?

Tuesday, August 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’மாவீரன்’ படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ’மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதிஷங்கர் நடிக்க இருப்பதாகவும், இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

அதே போல் இந்த படத்தில் பழம்பெரும் நடிகை சரிதா, சிவகார்த்திகேயன் அம்மாவாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தங்கை கேரக்டர் ஒன்று இருப்பதாகவும் அந்த கேரக்டரில் நடிக்க பிரபல யூடியூபர் மோனிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமான மோனிஷா இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ என்ற திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பரத் ஷங்கர் இசையில் விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.