உள்ளே புகுந்து பாரு, ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ் சாரு: கலக்கும் யுவன் ரசிகர்கள்

தமிழ் திரையுலகின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா, சரத்குமார் நடித்த ’அரவிந்தன்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகி, தற்போது அவர் அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் என்பதும் 100 படங்களுக்கு மேல் இசையமைத்து வெற்றிகரமாக தனது இசை பயணத்தை தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் திரையுலகில் யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கு என்றே ஒரு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதும், பிரபல இயக்குனர்கள் பலர் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜாவையே தங்களது படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் மூலம் புகழ் பெற்ற புகழ், ஷிவானி, ஷிவாங்கி ஆகியோர்களுக்கு கூட இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்றும் ஆனால் கடந்த பல வருடங்களாக இசையமைப்பாளராக இருந்துவரும் யுவனுக்கு ஒரு மில்லியனுக்கும் குறைவான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்றும் மீம்ஸ் வைரலானது. இதனை அடுத்து யுவன்சங்கர் ராஜா ரசிகர்கள் தீவிரமாகி தற்போது ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் பெற தீவிரமாகி வருகின்றனர். இன்னும் சில நாட்களில் யுவன் ஒரு மில்லியன் ஃபாலோயர்களை கடந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.