close
Choose your channels

'தல 59' படத்தில் எத்தனை பாடல்கள்?

Tuesday, February 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர், தற்போது 'தல 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'பிங்க்' ரீமேக் திரைப்படமான இந்த படம் வரும் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கான பாடல்கள் கம்போஸ் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் இரண்டு பாடல்கள் மற்றும் இரண்டு தீம் பாடல்கள் என மொத்தம் நான்கு பாடல்களை யுவன்ஷங்கர் ராஜா கம்போஸ் செய்யவுள்ளதாகவும், அவற்றில் ஒரு பாடலின் கம்போஸிங் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அஜித் நடித்த பில்லா, மங்காத்தா போன்ற வெற்றி படங்களுக்கு யுவன்ஷங்கர் இசையமைத்த நிலையில் மீண்டும் அஜித்-யுவன் கூட்டணி இணைந்துள்ளதால் மேலும் ஒரு வெற்றி உறுதி என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் ஜோடியாக வித்யாபாலன் நடிக்கும் இந்த படத்தில் ஷராதாஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், அஸ்வின் ராவ், சுஜித் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். ஹெ.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.