close
Choose your channels

விஷ்ணுவிஷால்-விக்ராந்த் படத்தில் இணைந்த பிரபலம்!

Thursday, June 20, 2019 • தமிழ் Comments

விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை சஞ்சீவி என்பவர் இயக்கவுள்ளார் என்றும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் கதை, திரைக்கதையை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை சற்றுமுன் விஷ்ணுவிஷால் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதாவது இந்த படத்திற்கு இசையமைப்பாளராக யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார் என்பதுதான் அந்த அப்டேட். யுவனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும், அந்த கனவு இந்த படத்தின் மூலம் நிறைவேறியதாகவும் விஷ்ணுவிஷால் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக இன்று வெளியாகியுள்ள புதிய போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஆனந்த் ஜாய் என்பவர் தயாரிக்கவுள்ளார்.
 

Get Breaking News Alerts From IndiaGlitz