close
Choose your channels

'தப்பு பண்ணிட்டேன்': மீண்டும் இணைந்த யுவன்ஷங்கர் ராஜா - சிம்பு 

Thursday, July 1, 2021 • தமிழ் Comments

யுவன் சங்கர் ராஜா மற்றும் சிம்பு இணையும் ஆல்பத்திற்கு ’தப்பு பண்ணிட்டேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபலங்களான யுவன் சங்கர் ராஜா மற்றும் சிம்பு ஏற்கனவே ‘மாநாடு’ திரைப்படத்தில் இணைந்துள்ள நிலையில் தற்போது ஆல்பம் ஒன்றில் மீண்டும் இணைந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா திரைப்படங்களுக்கு இசையமைத்து பிஸியாக இருக்கும் நிலையில் தனி பாடல்களையும் தயாரித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் அறிமுக இசையமைப்பாளர் ஏ.கே.பிரியன் என்பவரின் இசையில் உருவாகும் தனிப்பாடல் ஒன்றை அவருடைய U1 ரிகார்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த பாடலுக்கு ’தப்பு பண்ணிட்டேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சற்று முன் யுவன் சங்கர் ராஜா அறிவித்து இதுகுறித்த போஸ்டர் ஒன்றையும் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் மிக விரைவில் வெளிவர இருப்பதாக யுவன் சங்கர் ராஜா அறிவித்துள்ளதை அடுத்து இந்த பாடலுக்காக சிம்பு ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz