close
Choose your channels

யுவன்ஷங்கர் ராஜாவின் 2வது பட அறிவிப்பு எப்போது?

Thursday, March 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜாவின் இசை வாரிசான யுவன்ஷங்கர் ராஜா, கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இருபது வருடங்கள் முடிந்த கொண்டாட்டம் சமீபத்தில் நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இசைத்துறையில் மட்டுமின்றி தயாரிப்பு துறையிலும் யுவன் இறங்கினார். YSR பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை சமீபத்தில் தொடங்கிய அவர் 'கொலையுதிர்க்காலம்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை 'பில்லா 2', 'உன்னை போல் ஒருவன்' படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாட்டில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்நிலையில் யுவன்ஷங்கர் ராஜா இரண்டாவது பட அறிவிப்பை மிக விரைவில் வெளியிட உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்,. தனது இரண்டாவது படம் அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும் என்றும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். யுவனின் இரண்டாவது பட அறிவிப்பு என்னவாக இருக்கும், அதில் நடிப்பவர் யாராக இருக்கும் என்பதே தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.