100 வருட தமிழ் சினிமாவில் இதுதான் முதல்முறை: சிம்புவின் வித்தியாசமான முயற்சி

  • IndiaGlitz, [Wednesday,August 02 2017]

100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ சாதனைகள், புதிய முயற்சிகள் மெற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை தமிழ் சினிமா செய்யாத, ஏன் கேள்விகூட படாத புதிய முயற்சி ஒன்றை நடிகர் சிம்பு தனது அடுத்த படத்தில் செய்து வருகிறார்.

பொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் பின்னணி இசை உள்பட அனைத்து போஸ்ட் புரடொக்ஷன்களும் மேற்கொள்ளப்படும். ஆனால் முதல்முறையாக பின்னணி இசையை முதலில் முடித்துவிட்டு அதன் பின்னர் படப்பிடிப்புக்கு செல்கிறார் சிம்பு.

ஆம், சமீபத்தில் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் தனது அடுத்த படம் குறித்து குறிப்பிடுகையில், 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த படத்தில் பாடல்களும் இல்லை, இடைவேளையும் இல்லை என்றும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசை பணிகள் முழுவதும் முடிந்துவிட்டதாகவும், அந்த பின்னணி இசைக்கேற்ப தற்போது படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சிம்புவின் புதிய முயற்சி வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்.

More News

ரஜினி மீது புகார் கொடுத்த சினிமா ஃபைனான்சியர் குண்டர் சட்டத்தில் கைது

சினிமா ஃபைனான்சியர் போத்ரா என்றால் தமிழ் திரையுலகில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்ன பட்ஜெட் படம் முதல் சூப்பர் ஸ்டார் படம் வரை ஃபைனான்ஸ் செய்தவர்.

கெட் லாஸ்ட்: ஆரவ்வை பார்த்து ஆத்திரமாக கூறும் ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும்போது இல்லாத டென்ஷன் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவை பார்த்தால் வந்துவிடும்போல தெரிகிறது. அரைநிமிட வீடியோ நம்மை அதிக நேரம் யோசிக்க வைத்து சிலசமயம் குழப்பத்தையும் தருகிறது...

விஜய் டிவியின் இந்த டுவீட் தேவையா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு பங்கேற்பாளர் வெளியேறுவது தெரிந்ததே...

ஓவியாவை ஒட்டுமொத்தமாக கார்னர் செய்வது ஏன்?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாராக ஓவியா கருதப்பட்டு வரும் நிலையில் இதுவரை பங்கேற்பாளர்கள் மட்டுமே ஓவியாவை கார்னர் செய்து வந்தனர்...

கமல்ஹாசனின் டுவீட்டுக்கு என்ன அர்த்தம்: தலையை பிய்த்து கொள்ளும் ரசிகர்கள்

கமல்ஹாசன் சாதாரணமாக டுவீட் போட்டாலே பல பேருக்கு புரியாது. அதிலும் அரசியல் குறித்து அவர் பேச ஆரம்பித்தவுடன் போடும் டுவீட்டுக்கள் பல புரிவதில்லை...