டி.இமான் இசையில் பாட்டு பாடிய யுவன்: எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் இசையில் மற்றொரு முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஆர்யா நடிக்கும் அடுத்த படம் ’கேப்டன்’ என்றும் இந்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வருகிறார் என்பதையும் பார்த்தோம். இந்த கூட்டணியில் உருவான ’டெடி’ திரைப்படம் நல்ல வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அதே கூட்டணி இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்து வரும் நிலையில் இந்த படத்தின் ஒரு பாடலை யுவன்சங்கர்ராஜா பாடி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை மதன் கார்க்கி இயக்கியுள்ளார். இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்யா, சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, காவ்யா ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம், யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

More News

'விக்ரம்' அடுத்த பாகத்தில் ராம்சரண் தேஜா? என்ன கேரக்டர் தெரியுமா?

உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் உருவாக்கப்படும்

பயில்வான் ரங்கநாதன் பின்னணியில் தனுஷ்? பாடகி சுசித்ரா போலீஸ் புகார்

நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கடந்த சில ஆண்டுகளாக தனது யூடியூப் சேனலில் நடிகர், நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற செம டைட்டில்: 'எஸ்கே 20' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எஸ்கே 20'  படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

விக்கி-நயன் திருமணத்திற்கு எங்களையும் கூப்பிட்டிருக்கலாம்: நெருங்கிய உறவினர் வருத்தம்

 இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் இன்று காலை மிகச் சிறப்பாக நடந்ததை அடுத்து பல இந்திய திரையுலக பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு

இது உண்மையிலேயே ரொம்ப மோசம்: ஆத்திரமடைந்து டுவிட் போட்ட பூஜா ஹெக்டே!

 இது உண்மையிலேயே ரொம்ப மோசம் என நடிகை பூஜா ஹெக்டே மிகவும் ஆத்திரத்துடன் தனது டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது