close
Choose your channels

யுவன்ஷங்கர் ராஜாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Monday, January 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இசையமைப்பாளரான யுவன்ஷங்கர் ராஜா சமீபகாலமாக படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது தயாரிப்பில் வெளிவந்த முதல் படமான 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது.

இந்த நிலையில் யுவன் தயாரிக்கும் மற்றொரு படம் குறித்த தகவல் சற்றுமுன் இணையதளத்தில் வெளிவந்துள்ளது. 'ஆலிஸ்' என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை யுவன்ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 'பியார் பிரேமா காதல்' படத்தின் நாயகி ரைசா வில்சன் இந்த படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

மணி சந்துரு இயக்கவுள்ள இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவும், அர்ஜுன் நாகா படத்தொகுப்பு பணியும், மோகன் கலை இயக்க பணியும் செய்யவுள்ளனர். இந்த படத்தின் ஹீரோ உள்பட மற்ற நட்சத்திரங்களின் தகவல்கள் விரைவில் வெளிவரவுள்ளது.

யுவன்ஷங்கர் ராஜா ஏற்கனவே நயன்தாராவின் 'கொலையுதிர்க்காலம்' மற்றும் விஜய்சேதுபதியின் 'மாமனிதன்' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.