சுசீந்திரன் இயக்கும் 'ஜீனியஸ்' பட இசையமைப்பாளர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,August 04 2018]

பிரபல இயக்குனர் சுசீந்திரன் தற்போது 'ஜீனியஸ்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்த பின்னர் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. இவர் ஏற்கனவே சுசீந்திரன் இயக்கிய நான் மகான் அல்ல “ , ஆதலால் காதல் செய்வீர் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பான கதை கொண்ட 'ஜீனியஸ்' படத்துக்கு பின்னணி இசை முக்கியம் என்பதால் இயக்குனர் சுசீந்திரன் இந்த படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் படத்தை திரையிட்டு காண்பித்து பாடல் மற்றும் பின்னணி இசையை பெற்று வருகிறார். படத்தை முழுவதுமாக பார்த்த யுவன் படம் நன்றாக வந்துள்ளது என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

இந்த படத்தில் 'சூப்பர் சிங்கர் “ இறுதி சுற்றில் இடம்பிடித்த ஸ்ரீகாந்த் ஒரு பாடலை பாடியுள்ளார். இவர் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவானது.

ஜீனியஸ்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்று படத்தொகுப்பு மற்றும் ரீரெக்கார்டிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. செப்டெம்பர் மாத இறுதியில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
 

More News

'சர்கார்' படத்தில் இணையும் 'ஆளப்போறான் தமிழன்' கூட்டணி

விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில்  ஒரு பாடல் காட்சி உள்பட ஒருசில காட்சிகளை படமாக்க படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளனர். 

கருணாநிதியை குடும்பத்துடன் சென்று பார்த்த ராகவா லாரன்ஸ்

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் தற்போது நாற்காலியில் உட்காரும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கருணாநிதி மீம்ஸ் குறித்து நடிகர் சதீஷ்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்

ரஜினி, கமலுக்கு ஆதரவில்லை: தினகரனை ஆதரிக்க போவதாக பிரபல நடிகர் பேட்டி

அரசியலுக்கு வரும் எண்ணம் இருப்பதாகவும், அவ்வாறு வந்தால் ரஜினி, கமலுக்கு தனது ஆதரவு இல்லை என்றும், நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கும் டிடிவி தினகரனை ஆதரிக்க உள்ளதாகவும் தினேஷ் கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் கமல்ஹாசன்: பார்வையாளர்களுக்கு ஏமாற்றம்

பிக்பாஸ் வீட்டில் கடந்த ஒரு வாரமாக சர்வாதிகாரி டாஸ்க்கால் ரணகளமாக பிக்பாஸ் வீடு இருந்த நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதாக வீடியோ ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.