close
Choose your channels

பிரபலம் என்பதால் விலை கொடுக்கனுமா? கைதான பிக்பாஸ் நடிகை ஆதங்கம்!

Saturday, October 23, 2021 • தமிழ் Comments

பட்டியல் இனத்தவரை அவதூறாக பேசியதாகக் கூறப்படும் வழக்கில் பாலிவுட் நடிகை யுவிகா சவுத்ரி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் பிரபலம் என்பதாலேயே அதிகம் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என அவர் ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்து இருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தி பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை யுவிகா சவுத்ரி. இவர் சமீபத்தில் பட்டியல் இன மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஹரியானா காவல் துறையில் நடிகை யுவிகா சவுத்ரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கிற்காக நேற்றுமுன்தினம் கைதும் செய்யப்பட்டார்.

இதையடுத்து போலீஸ் விசாரணைக்குப் பின்பு நடிகை யுவிகா பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதே சமீபத்தில்தான் தெரியும். எனக்கு சம்மன் வந்தபோது புனே நகரில் ஷுட்டிங்கில் இருந்தேன். நான் சட்டத்தை மதிப்பவள். உடனே இந்த வழக்கிற்காக ஹரியானா வந்தேன். என்னிடம் போலீஸார் விசாரணை செய்தனர்.

நான் யாரையும் குறிப்பிட்டு அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு பேசிய அந்த வார்த்தைக்கு அப்போது எனக்கு அர்த்தம்கூட தெரியாது. மேலும் அந்த வீடியோ அப்லோட் செய்யப்பட்ட செல்போன் கூட போலீசாரிடம் இருக்கிறது.

இதையடுத்து தற்போது மும்பைக்கு திரும்பிவிட்டேன். விரைவில் இந்த சிக்கல் முடிவுக்கு வருமென நினைக்கிறேன். நாட்டில் நிறைய முக்கிய விஷயங்களுக்கு தீர்வு தேவை. ஆனால் பிரபலமாக இருப்பதால் இப்படி ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என நடிகை யுவிகா சவுத்ரி ஆதங்கத்துடன் கருத்துப் பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகை யுவிகாவின் இந்தக் கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz