close
Choose your channels

யுவராஜ் சிங் நடிக்கப்போகும் வெப் சீரிஸ்..!

Thursday, February 20, 2020 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யுவராஜ் சிங் நடிக்கப்போகும் வெப் சீரிஸ்..!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தன்னுடைய மனைவி ஹசல் கீச் மற்றும் சகோதரர் ஜோராவர் சிங் ஆகியோருடன் இணைந்து வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார். இந்த வெப் சீரிஸ் அசாமை தளமாகக் கொண்ட ட்ரீம் ஹவுஸ் புரொடக்ஷன் ஆதரிக்கிறது. இதில், ஜோராவர் முன்னிலை வகிப்பார். மேலும் அவரது தாயார் ஷப்னம் சிங்கும் இந்த திட்டத்துடன் தொடர்புடையவர் என்று தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து நிதா ஷர்மா, குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஷப்னம், வலைத் தொடருடன் இணைந்திருப்பது மிகவும் பெருமையாகவும் உற்சாகமாகவும் இருப்பதாகக் கூறினார்.“இந்த உலகம் உன்மையான யுவராஜ் சிங் மற்றும் ஜோராவர் சிங் ஆகியோரை பார்க்கும். வெப் சீரிஸின் மையப் பாத்திரம் எனது இளைய மகன் ஜோராவரை மையமாகக் கொண்டுள்ளது, மேலும் ஒரு தாயாக, எனது மகன்கள் மற்றும் மருமகள் ஆகியோரை பற்றி நான் பெருமைப்படுகிறேன்,” என்று அவர் கூறினார்.

அக்‌ஷய் குமாரின் வரவிருக்கும் ‘பச்சன் பாண்டே' திரைப்படத்தை எழுதிய பாலிவுட் எழுத்தாளர் விபின் யூனியலும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளார். மேலும் பல பாலிவுட் நடிகர்கள் நடிகர்கள் உடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

“முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் அவரது சகோதரர் ஜோராவர் சிங் ஆகியோர் இடம்பெறும் வெப் சீரிஸை உருவாக்குவது பெருமைமிக்க விஷயம். டி சீரிஸ் ஸ்டேஜ் ஒர்க்ஸ் அகாடமி மற்றும் ட்ரீம் ஹவுஸ் புரொடக்‌ஷனின் பார்வையைத் தொடர்ந்து, அசாமின் இளம் திறமைகளை அடையாளம் காண்டு ஒரு தளத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்” என்று ஷர்மா கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.