ஜீ தமிழ் 'அண்ணா' சீரியலில் இருந்து விலகிய நடிகை.. இனி இவருக்கு பதில் இவர் யார்?

  • IndiaGlitz, [Wednesday,April 10 2024]

ஜீ தமிழ் சேனலில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ‘அண்ணா’ என்ற சீரியலில் இருந்து பிரபல நடிகை விலகி விட்டதை அடுத்து அவர் நடித்த கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ் என்பதும் இதில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மிர்ச்சி செந்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'அண்ணா’ சீரியல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திருப்பத்துடன் ஒளிபரப்பாகி வரும் இதில் மிர்ச்சி செந்திலில் நான்கு தங்கைகளின் ஒருவராக வீரா என்ற கேரக்டரில் நடித்த தர்ஷு என்பவர் இந்த தொடரில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’எதிர்பாராத காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் 'அண்ணா’ குழுவை நான் மிகவும் மிஸ் பண்ணுவேன், எனது வீரா கேரக்டரில் புதிதாக நடிக்க உள்ள நடிகைக்கு எனக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து இந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் என்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வீரா கேரக்டரில் நடிப்பதற்கான நடிகை தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

More News

சிங்கம் சிங்கிளா தான் வரும்: செஃப் வெங்கடேஷ் பட் வீடியோ வைரல்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்த வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சிகளில் இருந்து விலகி விட்டதாக கூறிய நிலையில் தற்போது தன்னுடைய புதிய பயணம் குறித்த வீடியோவை

சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இந்த நிலையில் தற்போதைய அவருடைய மொத்த சொத்து மதிப்பு 36 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரிடம் விலைமதிப்புள்ள ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ கார் வகைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

'இந்தியன் 2' படத்தில் கேமியோ ரோலில் 'இந்தியன்' நடிகை.. ஷங்கரின் வேற லெவல் பிளான்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2'  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது

கமல் படத்தில் மாஸ் கேரக்டர்.. ரஜினி படத்தில் காமெடியன்.. பகத் பாசில் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தில் ஒரு மாஸ் கேரக்டரில் நடித்த நடிகர் பகத் பாசில், ரஜினி நடித்து வரும் 'வேட்டையன்' திரைப்படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுவது

மகாபலிபுரம் ரிசார்ட்.. கையில் சரக்கு.. கால் கொலுசில் கவிதை.. 42 வயது நடிகையுடன் 'டாக்டர்' பட நடிகர்..!

கடந்த சில ஆண்டுகளாக டாக்டர் பட நடிகர், 42 வயது நடிகையை காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் அவர்களது போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை