நேட்டாவில் இணைய விரும்பவில்லை… உக்ரைன் அதிபரின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

  • IndiaGlitz, [Thursday,March 10 2022]

14 நாட்களைத் தாண்டி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடுமையான இராணுவ நடவடிக்கைகளை எடுத்துவந்த நிலையில் தற்போது உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கும் விருப்பத்தை கைவிட்டுவிடுதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நேட்டா அமைப்பில் இணைவதற்கு உக்ரைன் ஆர்வம் காட்டிவந்த நிலையில் அந்நாட்டின் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை எடுத்தது. இதற்கு பல உலகநாடுகள் எதிர்ப்பு தெரிவித்துவந்தன. மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக கருத்துக் கூறியதோடு சில உதவிகளையும் செய்ய முன்வந்தது. ஆனால் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டா அமைப்பு இறுதிவரை தனது படைகளை அனுப்பாமல் இருந்ததோடு உக்ரைன் அதிகாரப்பூர்வமாக நேட்டாவில் இன்னும் இணையவில்லை. அதனால் உக்ரைனுக்குள் நேட்டா இராணுவம் செல்லாது என்றும் கூறியிருந்தது.

இதையடுத்து உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட போரினால் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். மேலும் உக்ரைன் பாதுகாப்பு படை தங்களது சொந்த நாட்டு மக்களையே இராணுவத்தில் இறக்கவும் செய்தது. இப்படி கடந்த 2 வாரங்களாக குடியிருப்பு பகுதிகள், விமான நிலையங்கள், வணிகக் கட்டிடங்கள் எனப் பல்வேறு பகுதிகள் அழிக்கப்பட்டு பெரும் இழப்புகளை உக்ரைன் சந்தித்தது.

இந்நிலையில் தனது நாட்டின் இறையாண்மையே முக்கியம் என்று பேசிக்கொண்டிருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீரென்று நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் இனியும் அழுத்தம் கொடுக்கப் போவதில்லை. உக்ரைனை ஏற்றுக்கொள்ள நேட்டோ தயாராக இல்லை. இதைப் புரிந்து கொண்ட பின்னர் நீண்ட நாட்களுக்கு முன்பே நாங்கள் அமைதியாகிவிட்டோம் என வீடியோ வெளியிட்டுள்ளார்.

மேலும் சர்ச்சைக்குரிய முரண்பாடுகளுக்கும் ரஷ்யாவுடனான மோதலுக்கும் அந்தக் கூட்டணி அஞ்சுகிறது. நான் மண்டியிட்டுக் கெஞ்சும் தேசத்தின் அதிபராக இருக்க விரும்பவில்லை. அதனால் இனியும் அதுகுறித்து கோரிக்கைகளை முன்வைக்கப் போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தள்ளார்.

தொடர்ந்து கிழக்கு உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா சுதந்திர நாடுகளாக அறிவித்து இருப்பது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், ரஷ்யாவைத் தவிர வேறெந்த உலக நாடுகளும் அந்தப் பகுதிகளை அங்ககீகரிக்கவில்லை. அதனால் அப்பகுதிகளை சுதந்திர நாடுகளாக அறிவிப்பதற்கு முன்பாக மக்கள் எந்த நாட்டைச் சார்ந்திருக்க விரும்புகிறார்கள் என அறிய வேண்டியது முக்கியம். இந்தப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் ஒரு உடன்பாட்டுக்கு வரலாம். வெளிப்படையான பேச்சுவார்த்தை சமரசத்துக்கு தயாராகவே இருக்கிறேன். ரஷ்ய அதிபர் புடின் இறுதி எச்சரிக்கையை விட்டுவிட்டு பேச்சுவார்தையை தொடங்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உக்ரைன் மீது எடுத்துவரும் இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கு ரஷ்யா 4 நிபந்தனைகளை விதித்து இருந்தது. அதில் உக்ரைன் உடனடியாக தனது இராணுவ நடவடிக்கைகளை கைவிடவேண்டும், மேலும் நடுநிலைமையை கடைப்பிடிப்பதற்கு ஏற்றவாறு அரசியலமைப்பை மாற்றி சட்டம் அமைக்க வேண்டும். தொடர்ந்து கிரிமியாவை ரஷ்யாவின் பிரதேசப் பகுதியாக அறிவிக்க வேண்டும்.

கூடவே உக்ரைனின் கிழக்குப் பகுதிகளான டொனெட்ஸ்க், லுகான்ஸ்க் பகுதிகளை சுதந்திர நாடுகளாக அறிவிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு உடன்பட்டால் ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை உக்ரைனில் நிறுத்திக் கொள்ளும் என விளாடிமிர் புடின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். தற்போது உக்ரைன் அதிபர் நேட்டாவில் இணையப் போவதில்லை எனக் கூறியிருப்பதால் போர் நிறுத்தம் ஏற்பட்டு பேச்சுவார்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வாவ், செல்வா அத்தான்: செல்வராகவனை பாராட்டிய ஐஸ்வர்யா தனுஷ்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் தற்போது தனுஷ் நடித்து வரும் 'நானே வருவேன்' என்ற திரைப்படத்தை இயக்கி வருவது மட்டுமின்றி 'பீஸ்ட்' 'சாணிகாகிதம்' உள்பட ஒரு சில படங்களிலும் முக்கிய வேடத்தில்

சேல்ஸ்கேர்ள் ஆக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதை பார்த்தோம்.

'வலிமை' வசூல் ரூ.200 கோடியை தாண்டிவிட்டதா? போனிகபூர் தகவல்

அஜித் 'வலிமை' வாலி திரைப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் 5 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது.

கரு.பழனியப்பன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் மற்றும் நடிகர் கரு பழனியப்பன் நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிம்பு தொடர்ந்த 1 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு: ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு!

சிம்பு தொடர்ந்த ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கில், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.