close
Choose your channels

எனது அடுத்த படத்தில் சசிகலாவின் உண்மை முகம். பிரபல இயக்குனர்

Friday, February 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உண்மை நிகழ்வுகளையும் சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் குறித்தும் திரைப்படம் எடுக்கும் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, சசிகலா குறித்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே இருந்த உண்மையான உறவு என்ன? என்பது குறித்து போயஸ்கார்டனில் பணிபுரிந்த ஊழியர்கள் தன்னிடம் கூறியவற்றை எனது அடுத்த படத்தில் காட்சிகளாக வைப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இந்த காட்சிகள் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் பழனிச்சாமியை அனைத்து எம்.எல்.ஏக்களும் ஆதரிப்பது ஏன் என்ற ரகசியத்தை போயஸ் கார்டனில் வேலை செய்யும் தோட்டக்காரர் மூலம் தான் தெரிந்து கொண்டதாகவும் ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

ராம்கோபால் வர்மாவின் சசிகலா திரைப்படம் வெளிவந்தால் உண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.