close
Choose your channels

'இந்தியன் 2' சிங்கிள் பாடல் எப்போது? பாடலின் முதல் வரி இதுதானா?

Wednesday, April 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் படமாக்கப்பட்ட சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் பாடல் தான் முதல் சிங்கிள் பாடலாக வெளியாக இருப்பதாகவும் இந்த பாடலின் டைட்டில் "தாத்தா வராரு தாத்தா வராரு" என்றும் கூறப்படுகிறது. அனேகமாக இந்த படத்தில் இந்த பாடல் தான் முதல் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடல் ரிலீஸ் ஆகும் தேதி குறித்து அறிவிப்பு விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்றும் ’இந்தியன் 2’ கொண்டாட்டம் இதன் மூலம் ஆரம்பமாகிவிட்டது என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.