close
Choose your channels

103 வயது பழம்பெரும் இயக்குனர் மித்ரதாஸ் காலமானார்

Tuesday, February 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பி.யூ.சின்னப்பா நடித்த 'தயாளன்', எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த 'சிவகாமி' உள்பட பல படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் மித்ரதாஸ் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 103
மதுரையை சேர்ந்த மித்ரதாஸ், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தவர். தமிழ், மலையாளம், சிங்கள மொழி படங்களை இயக்கியுள்ள இவர் 1942 முதல் 1945 வரை நடந்த இரண்டாவது உலகப்போரின் போது ராணுவத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போருக்கு பின்னர் மீண்டும் திரைத்துறைக்கு திரும்பி மலையாளத்தில் இவர் இயக்கிய ஹரிச்சந்திரா' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று அவர் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.