பிரபல வில்லன் நடிகரின் வீட்டுக்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள்!

தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் வீட்டில் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் என்பதும் இவர் ஆர்கே செல்வமணி இயக்கிய ’கேப்டன் பிரபாகரன்’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவ்வப்போது அரசியலில் ஈடுபட்டு வருவார் என்பதும் நாம் தமிழர் கட்சியில் இருந்த மன்சூரலிகான் அதன் பின்னர் திடீரென தனிக்கட்சி ஆரம்பித்தார் என்பதும், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் நடிகர் மன்சூரலிகான் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு இன்று அதிகாலை வந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திடீரென சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் மன்சூர்அலிகான் தனது வீட்டை அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுர அடியை ஆக்கிரமித்து வீடு கட்டியதாகவும், அதனால் இந்த சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

யோகிபாபுவின் சூப்பர் பேட்டிங் ஸ்டைல்: வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு சிறந்த நடிகர் மட்டுமின்றி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம். குறிப்பாக அவர் படப்பிடிப்பின் போது கிடைக்கும்

இந்த வாரம் வெளியேறும் பிக்பாஸ் போட்டியாளர் யார்? வாக்குகள் விபரம்

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவார்கள் என்பதும், அதற்கான நாமினேஷன் திங்கட்கிழமை நடைபெறும் என்பதும், குறைந்த வாக்குகளின் அடிப்படையில்

பிரபலம் என்பதால் விலை கொடுக்கனுமா? கைதான பிக்பாஸ் நடிகை ஆதங்கம்!

பட்டியல் இனத்தவரை அவதூறாக பேசியதாகக் கூறப்படும் வழக்கில் பாலிவுட் நடிகை

நண்பனை நம்பி ஏமாந்துவிட்டேன்… பணமோசடி புகார் அளித்த பிரபல நடிகை!

போதைப்பொருள் வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளிவந்து இருக்கும்

உலகளாவிய அன்பு: தல அஜித் குறித்து போனிகபூரின் நெகிழ்ச்சியான டுவிட்!

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' என்ற திரைப்படத்தை தயாரித்த பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள், அந்த படத்தின் வெற்றிக்கு பின் அஜித் நடித்து முடித்துள்ள 'வலிமை' என்ற திரைப்படத்தை