கொரோனாவில் இருந்து மீண்டதும், மீண்டும் பணியை தொடங்கிய அமிதாப்!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவருடைய மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராதித்யா ஆகிய நால்வருக்கும் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதன் பின்னர் அவர்கள் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒவ்வொருவராக கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கொரோனாவில் இருந்து குணமான நடிகர் அமிதாப்பச்சன், வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலத்திற்கு பின் தற்போது மீண்டும் தனது பணியை தொடங்கி உள்ளார். ’கெளன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் 12வது பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் அதில் தான் கலந்து கொண்டதாகவும் அமிதாப் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து, அதுகுறித்த ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்

கடந்த 2000ம் ஆண்டு தொடங்கிய ‘கெளன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சி தற்போது 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்பதும், இந்த 20 ஆண்டுகளில் 11 சீசன்கள் முடிவடைந்து தற்போது 12வது சீசன் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 3வது சீசன் தவிர அனைத்து சீசன்களையும் அமிதாப்பச்சன் தான் தொகுத்து வழங்கினார் என்பதும், மூன்றாவது சீசனை மட்டும் நடிகர் ஷாருக்கான் தொகுத்து வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

கொரோனா வார்டில் கைவிலங்குடன் மது அருந்தும் நபர்!!! வைரலாகும் புகைப்படம்!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில் தன்பாத்தில் உள்ள அரசு

கொரோனாவை விரட்டும் களிம்பு!!! உலகையே அசத்தும் புது கண்டுபிடிப்பு!!!

அமெரிக்காவின் மருந்து நிறுவனம் ஒன்று கொரோனாவைத் தடுக்கும் வகையிலான களிம்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

தோட்டத்தில் வேலைப்பார்த்த தொழிலாளர்களை விமானத்தின் மூலம் அழைக்கும் பாசக்கார முதலாளி!!!

தலைநகர் டில்லியில் விவசாய நிலங்களை வைத்திருக்கும் முதலாளி ஒருவர் தனது தோட்டத்தில் ஏற்கனவே வேலைப் பார்த்து வந்த தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்டை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

எஸ்பிபி குறித்த பரவிய தகவல் வதந்தி: எஸ்பிபி சரண் விளக்கம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம்

பீட்சா ஆர்டர் செய்த பெண்ணின் வங்கிக்கணக்கில் ரூ.43 ஆயிரம் கொள்ளை!!! நூதனத் திருட்டின் மர்மப் பின்னணி!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்த பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.43,900 கொள்ளை அடிக்கப்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.