தடுப்பூசிக்கு பதிலாக வெற்று ஊசியை செலுத்திய நர்ஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

பீகார் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும்போது அவசரத்தில் செவிலியர் ஒருவர் வெற்று ஊசியை இளைஞர் ஒருவருக்கு செலுத்தி உள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தின்போது சாந்தாகுமார்(48) எனும் செவிலியர் தவறுதலாக வெற்று ஊசியை அசார் என்னும் இளைஞருக்கு செலுத்தி உள்ளார். அசாரின் நண்பர் விளையாட்டாக எடுத்த வீடியோவால் இந்த விஷயம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. இதனால் செவிலியர் சாந்தா குமாரை அம்மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடி காட்டி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுகுறித்து தடுப்பூசி செலுத்தும் இடத்தில் அதிகபடியான கூட்டம் இருந்தது. அங்குள்ள நிலைமைகளினால் மன அழுத்தத்தில் இருந்த செவிலியர் இவ்வாறு பதற்றத்தில் செய்துவிட்டார் என மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் பதற்றத்தில் நர்ஸ் செய்த இந்த காரியம் தற்போது அதிருப்தியோடு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More News

கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்… சுகாதாரத்துறை தகவல்!

கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

கேப்டனுடன் மலரும் நினைவுகள்: நடிகை நதியாவின் நெகிழ்ச்சி பதிவு

தமிழ் திரையுலகில் கடந்த 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை நதியா என்பது அனைவரும் அறிந்ததே. அதன் பின்னர் அவர் திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாலும்,

'குக் வித் கோமாளி' கனி வீட்டில் இத்தனை புத்தகங்களா? ஒரு மினி நூலகமே இருக்கும்போல!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த சீசன் 2 நிகழ்ச்சியில் கனி டைட்டில் பட்டம் வென்றார் என்பதும் தெரிந்ததே

உள்ளே புகுந்து பாரு, ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ் சாரு: கலக்கும் யுவன் ரசிகர்கள்

தமிழ் திரையுலகின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா, சரத்குமார் நடித்த 'அரவிந்தன்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகி, தற்போது அவர் அஜித் விஜய் உள்பட பல

'பீஸ்ட்' படத்திற்காக களத்தில் இறங்கினார் பூஜா ஹெக்டே! வைரல் புகைப்படம்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'பீஸ்ட்'. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் சென்னையில்