நான் செல்லும் இடமெல்லாம் கோமியம் தெளிப்பீர்களா? பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி

  • IndiaGlitz, [Wednesday,January 17 2018]

பிரகாஷ்ராஜ் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியால் அந்த மேடை புனிதத்தன்மையை இழந்துவிட்டதாக கருதிய பாஜகவினர் அந்த மேடையை கோமியம் ஊற்றி கழுவியதாக தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருபவர்களில் ஒருவர் நடிகர் பிரகாஷ்ராஜ். குறிப்பாக மோடியை தன்னை விட சிறந்த நடிகர் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்

இந்த நிலையில் நேற்று கர்நாடகா மாநிலம் சிர்சாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியிலும் வழக்கம்போல் பாஜகவை அவர் கடுமையாக விமர்சித்து பேசினார்.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் அங்கு வந்த பாஜகவின் இளைஞர் அமைப்பு, மேடையை பசுவின் கோமியம் ஊற்றி புனிதப்படுத்தினர். இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரகாஷ்ராஜ், 'நான் செல்லும் இடம் அனைத்திலும் இதேபோல் கோமியம் தெளிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

More News

17 வருடங்களுக்கு பின் மீண்டும் கவுதம் மேனனுடன் இணையும் பிரபல நடிகர்

கடந்த 2001ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்குனராக அறிமுகமான படம் 'மின்னலே'. இதே படத்தில்தான் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் அறிமுகமானார்.

கமல்ஹாசனால் அரசியலில் வெற்றி பெறுவது சந்தேகம்தான்: தமிழிசை

உலக நாயகன் கமல்ஹாசன் மீது வைக்கப்பட்டிருந்த ஒரே குற்றச்சாட்டு அவர் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் என்பதுதான்.

எம்ஜிஆர் பட பூஜைக்கு தலைமை தாங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி

எம்ஜிஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் அதேபோல் வெளிநாட்டு காட்சிகளுடன் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி நடிக்க திட்டமிட்டிருந்தார்

அரசியல் கட்சி அறிவிக்கும் தேதி அறிவிப்பு: கமல்ஹாசன் தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டதாக ஏற்கனவே உறுதி செய்த நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாகவும்,

தனுஷின் 'மாரி 2' படத்தில் இசைஞானி இளையராஜா

தனுஷின் 'மாரி 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.