இந்தியாவில் முதல் முறையாக… தமிழகத்தில் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி!!!

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக இதுபோன்ற அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் மக்கள் இயல்வு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை ஒவ்வொரு மாநிலங்களும் ஓயாது மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையிலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது.

மேலும் இந்திய அளவிலேயே தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பு வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பலரும் கருத்துக் கூறி வருகின்றனர்.

More News

'வலிமை' படத்துக்காக அஜித் கொடுத்த சவால்: யுவன்ஷங்கர் ராஜா

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த படம் குறித்து யுவன் சங்கர் ராஜா ஒரு சில தகவல்களை பேட்டியில் கூறியிருக்கிறார் 

கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்ட இளம்பெண் திடீர் உயிரிழப்பு… பதற வைக்கும் பின்னணி!!!

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் இரண்டும் இணைந்து

சனம்ஷெட்டிக்கு பாலாஜி பதிலடி, பாலாஜிக்கு ரமேஷ் பதிலடி: பரபரப்பான பட்டிமன்றம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவிலும் பட்டிமன்ற காரசார விவாத காட்சிகள் தான் உள்ளது.

பெரம்பலூரில் டைனோசர் முட்டை??? ஆர்வத்தைத் தூண்டும் சுவாரசியத் தகவல்!!!

பெரம்பலூர் பகுதியில் டைனோசர் முட்டை அளவிற்கு பெரிதான சில படிமங்கள் கிடைத்து இருக்கின்றன.

வெளியில இருக்குறவங்க செருப்பால அடிப்பாங்க: அறந்தாங்கி நிஷா ஆவேசம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு மணி நேர நிகழ்ச்சியை விட தினமும் வெளியாகும் 30 வினாடிகள் கொண்ட மூன்று புரமோக்கள் ரசிக்க வைக்கும் அளவுக்கு இருப்பதோடு, நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் வகையிலும் உள்ளது. புரமோவை