close
Choose your channels

கொலை செய்து மண்டையை பீரிசரில் சேமித்து வைத்த டிவிட்டர் கில்லர்!!! குலை நடுங்கும் சம்பவம்!!!

Wednesday, December 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொலை செய்து மண்டையை பீரிசரில் சேமித்து வைத்த டிவிட்டர் கில்லர்!!! குலை நடுங்கும் சம்பவம்!!!

 

ஜப்பான் நாட்டில் நடைபெற்ற ஒரு வழக்கின் குற்றவாளிக்கு நேற்று மரணத் தண்டனை வழங்கப்பட்டதை அடுத்தும் அந்த குற்றவாளி மீது பலரும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். காரணம் அந்தக் கொலைகாரன் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் டிவிட்டரில் கருத்துப் பதிவிட்டவர்களை பொறி வைத்து தேடி அவர்களுடன் உரையாடி நயவஞ்சகமாகக் கொலை செய்துள்ளான். மேலும் அவர்களது உறுப்புகளை தன்னுடைய குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்துள்ளான். இதற்கான காரணத்தைக் கேட்டால் அவர்களின் சம்மதத்தைப் பெற்ற பிறகே நான் அவர்களை கொலை செய்தேன் என்றும் வாதாடி இருக்கிறான்.

இப்படிப்பட்ட சைக்கோ டிவிட்டர் கொலைகாரனைப் பற்றிய செய்திததான் தற்போது ஜப்பான் நாட்டில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மனஅழுத்தம் கொண்ட பலரும் சமூக வலைத்தளத்தில் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் எனப் பதிவிடுவதும் நண்பர்களிடம் இப்படிக் கூறுவதையும் வாடிக்கையாக வைத்து உள்ளோம். ஆனால் இதையே தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு டோக்கியோ நகரைச் சேர்ந்த தகாஹிரோ ஷிரைஷி எனும் 30 வயது நபர் 9 பேரை கொலை செய்து இருக்கிறார். இதில் ஒரு ஆணும் அடக்கம்.

கடந்த 2017 ஆகஸ்ட்-நவம்பர் மாத இடைவெளியில் டிவிட்டரில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் பதிவிட்ட பிரபலங்களுடன் உரையாடி இருக்கிறான் இந்தக் கொலைகாரன். அடுத்து அவர்களை பாலியல் வன்புணர்வுக்கும் ஆளாக்கி இருக்கிறான். பின்பு கொடூரமாகக் கொலை செய்து அவர்களது உடல் உறுப்புகளை வெட்டி தனது பிரிட்ஜில் பத்திரமாக சேமித்து வைத்துள்ளான். இப்படி கொலைச் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரர், அப்பெண்ணின் டிவிட்டர் உரையாடல்களை வைத்து அனைத்துத் தகவல்களையும் திரட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஷிரைஷி கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை டோக்கியோவில் உள்ள நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அந்த விசாரணையை 16 நீதிபதிகள் சேர்ந்தது நடத்தினர். மேலும் அந்த வழக்கை பார்வையிட ஒரே நேரத்தில் 400 பொது மக்கள் அந்த நீதிமன்றத்திற்குள் இருந்தனர் என்பதும் வியப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் கொடூரமாக 9 பேரை வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த ஷிரைஷிக்கு மரணத் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் வாதாடினார். ஆனால் ஷிரைஷி வழக்கறிஞர் இதுகுறித்து கொலைச் செய்யப் பட்டவர்களின் சம்மதத்தைப் பெற்ற பிறகே கொலை செய்ததாக வாதாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.