கமல் கொடுத்த கிஃப்ட்: மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட அமெரிக்க நடிகை

  • IndiaGlitz, [Tuesday,May 19 2020]

உலகநாயகன் என்ற பெயருக்கு ஏற்ப நடிகர் கமல்ஹாசனின் புகழ் உலகம் முழுவதும் பரவி உள்ளது என்பது தெரிந்ததே. உலக சினிமா பிரபலங்கள் அனைவரும் கமல்ஹாசனையும் அவரது திறமையையும் அறிந்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல அமெரிக்க நடிகை McKenzie Westmore அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’பலர் என்னிடம் கமலஹாசனை உங்களுக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். அவ்வாறு கேள்வி எழுப்பியவர்களுக்கான பதில்தான் இதோ என்று இரண்டு புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார்.

முதல் புகைப்படம் கமலஹாசனுடன் இணைந்து எடுத்த புகைப்படமும் இரண்டாவது புகைப்படத்தில் அவர் தனது தந்தையுடன் வித்தியாசமான காஸ்ட்யூமில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதில் முதல் புகைப்படம் கமல்ஹாசனுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் எடுத்துக் கொண்டது என்றும் அதன்பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இரண்டாவது புகைப்படம் தன்னுடைய தந்தையுடன் இருக்கும் புகைப்படம் என்றும் அந்த புகைப்படத்தில் தான் அணிந்திருக்கும் உடை, கமல் அவர்களால் கிஃப்டாக கொடுக்கப்பட்டது என்றும் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்க நடிகை ஒருவர் கமல்ஹாசன் உடனான தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

ஓடிடியில் வெளியாகிறது அமிதாப்பச்சனின் அடுத்த படம்: திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்

லாக்டவுனுக்கு பின் காதலரை கைப்பிடிக்கின்றாரா வரலட்சுமி?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வரலட்சுமியின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் வெளி வந்து கொண்டே இருக்கும்.

10ஆம் வகுப்பு தேர்வில் திடீர் மாற்றம்: புதிய அட்டவணை

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்

லாக்டவுன் எதிரொலி: இ.எம்.ஐ கட்ட முடியாமல் தவிக்கும் பிரபல நடிகைகள்

லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது என்ற காரணத்தால் பல திரையுலக பிரபலங்கள் தவணை முறையில் ஆடம்பர வீடுகள், ஆடம்பர கார்கள் வாங்கியுள்ளனர்

இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு: 2வது இடத்தில் தமிழகம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.