அமமுக வேட்பாளரான சிம்பு படத்தயாரிப்பாளர்

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அக்கட்சியின் திருநெல்வேலி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

ஏற்கனவே நெல்லை தொகுதியின் வேட்பாளராக அருள்மணி என்பவர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற படம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

மேலும் அமமுக ஓசூர் சட்டமன்ற வேட்பாளர் புகழேந்தி எனவும், புதுவை மக்களவை தொகுதி வேட்பாளர் தமிழ்மாறன் எனவும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி தினம் என்ற நிலையில் நெல்லை வேட்பாளராக மைக்கேல் ராயப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சு: ராதாரவி விளக்கம்

தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக நடிகர் ராதாரவி விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: 

ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

நடிகை நயன்தாரா குறித்து கண்ணியக்குறைவான வகையில் விமர்சனம் செய்த நடிகர் ராதாரவியை சற்றுமுன் திமுக சஸ்பெண்ட் செய்தது. ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர்

என் வாழ்க்கை வரலாற்றை மூன்றே நாட்களில் படமாக்கலாம்: இளையராஜா

பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகியும், உருவாக்கப்பட்டும் வருகின்றன. தோனி, சச்சின், மேரிகோம், உள்பட பல வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வசூலிலும் சாதனை புரிந்துள்ளது

உங்கள் பெயரில் உள்ள 'ராதா'வை எடுத்துவிடுங்கள்: விஷால்

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் ராதாரவி மீது ஏன் இன்னும் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என திரையுலகை சேர்ந்த பலர் கருத்து தெரிவித்து

ராதாரவி மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டை வைத்த விக்னேஷ் சிவன்!

நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு நேற்று விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில்