close
Choose your channels

ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

Monday, March 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நயன்தாரா குறித்து கண்ணியக்குறைவான வகையில் விமர்சனம் செய்த நடிகர் ராதாரவியை சற்றுமுன் திமுக சஸ்பெண்ட் செய்தது. ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ராதாரவிக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.