கொரோனா உறுதி செய்யப்பட்டது தெரியாமலே முதியவரின் உடலுக்கு இறுதிசடங்கு செய்த உறவினர்கள்!!!

  • IndiaGlitz, [Friday,September 04 2020]

 

சென்னை அடுத்த மணிலியில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட விஷயம் தெரியாமலே உறவினர்கள் ஒன்றுகூடி இறுதிச் சடங்கு செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மணலி அடுத்த புதுநகரில் 62 வயது முதியவரும் அவரது மனைவியும் வசித்து வந்திருக்கின்றனர். நேற்றுமுன்தினம் முதியவரின் மனைவிக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் தம்பதி இருவரும் புதுநகர் பகுதியில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு தம்பதி இருவருக்குமே கொரோனா உறுதிச்செய்த மருத்துவர்கள் அவர்களுக்கு மாத்திரைகளைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

வீட்டுக்கு வந்த முதியவருக்கு அன்று இரவே நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்து இருக்கிறார். இந்நிலையில் முதியவருக்கு கொரோனா உறுதிச்செய்யப்பட்டது தெரியாமலே அவரது மகன்கள், மகள் மற்றும் உறவினர்கள் எல்லாம் ஒன்றுகூடி எப்போதும் போல இறுதிச் சடங்குகளை செய்திருக்கின்றனர். அப்போது திடீரென மாநகராட்சி ஊழியர்கள் முதியவர் உயிரிழந்த விஷயம் தெரியாமலே அவரைத் தேடி வீட்டுக்கு வந்திருக்கின்றனர். வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

இறந்த முதியவருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. இப்படி பாதுகாப்பு இல்லாமல் இறுதிச் சடங்குகளைச் செய்யக்கூடாது. நாங்களே உடலை உரிய பாதுகாப்புடன் அடக்கம் செய்வோம். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருக்கிறது எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றிருக்கின்றனர். மாநகராட்சி ஊழியர்களின் பேச்சைக் கேட்ட உறவினர்கள் உடலை அப்படியே விட்டுவிட்டு நகர்ந்து நின்று அழ ஆரம்பித்து இருக்கின்றனர். இப்படியே மாலை 5 மணி ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால் முதியவரின் மனைவி கடும் கூச்சல் போட்டிருக்கின்றார். இதனால் உறவினர்கள் எல்லாம் ஒன்றுகூடி சாலை மறியலிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

கடைசியில் உடலை உறவினர்களே அடக்கம் செய்ய முடிவுசெய்து எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முற்பட்டபோது படு வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று முதியவரின் உடலை எந்தப் பாதுகாப்பும் இல்லாம் தூக்கிக்கொண்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாகத் தகவல் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் அலட்சியத்துடன் நடந்துக் கொண்டதாகப் பலரும் குற்றம் சாட்டியிருக்கின்றனர். அதேநேரத்தில் கொரோனாவையும் பொருட்படுத்தாத உறவினர்கள் இடுகாடு வரைக்கும் உடலை எடுத்துச் சென்ற விவகாரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் புதுநகர் பகுதியில் 6 மணி நேரத்திற்கும் மேலாக கடும் பதட்டம் நிலவியதாகக் கூறப்படுகிறது.

More News

வாகனங்களில் தனியாகச் செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டுமா???  சுகாதாரத்துறை விளக்கம்!!!

கார், இருசக்கரம், சைக்கிள் போன்ற வாகனங்களில் தனியாகச் செல்வோர் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லவேண்டுமா என்ற கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷான் விளக்கம் அளித்து உள்ளார்.

10 வருடங்களுக்கு பின் மீண்டும் களமிறங்கிய விஷ்ணுவிஷால் பட இயக்குனர்

விஷ்ணு விஷால், ரம்யா நம்பீசன் நடித்த 'குள்ளநரி கூட்டம்' படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி என்பவர் பத்து வருடங்களுக்கு பின் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயனின் 'ஊதா கலர் ரிப்பனுக்கு' அடிமையான அண்டை மாநில சூப்பர் ஸ்டார்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் இடம்பெற்ற 'ஊதா கலரு ரிப்பன்' என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும்

திருமண மண்டபமாக மாறுகிறது ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி! பரபரப்பு தகவல்

ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்பாக மாறிவிட்ட நிலையில் சமீபத்தில் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் மூடப்பட்டது

ஆன்லைன் வகுப்பில் பிரபலமான டீச்சருக்கு சினிமா வாய்ப்பு: அதன்பின் நிகழ்ந்த விபரீதம்!

ஆன்லைன் வகுப்பின் மூலம் மாநிலம் முழுவதும் பிரபலமான ஆசிரியை ஒருவருக்கு சினிமா வாய்ப்பு வந்த நிலையில் அவர் அந்த சினிமா வாய்ப்பை மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்