விஷால் மனுவை நிராகரித்த அதிகாரி திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Saturday,December 09 2017]

ஆர்.கே.நகரில் போட்டியிட மனுதாக்கல் செய்த விஷாலின் மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி திடீரென மாற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகர் விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்த தீபன், சுமதி ஆகிய இருவரும் தாங்கள் விஷாலை முன்மொழிந்து கையெழுத்திடவில்லை என்று தேர்தல் அதிகாரி முன்  வாக்குமூலம் கொடுத்ததால், விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி வேலுச்சாமி திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பிரவீன் நாயர் ஐஏஎஸ் என்பவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று திமுக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்திருந்த நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வங்கி தேர்வுக்கான புத்தகத்தில் த்ரிஷா குறித்த தகவல்

சமிபத்தில் நடிகை த்ரிஷாவுக்கு யூனிசெப் அமைப்பில் குழந்தைகளுக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞர் பதவி கிடைத்தது என்பது அனைவரும் அறிந்ததே.

2.0 படத்தில் இருந்து திடீரென விலக்கப்பட்ட பிரபல நிறுவனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் '2.0' திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

இன்னும் சற்று நேரத்தில் கவர்னருடன் விஷால் சந்திப்பு

நடிகர் விஷால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததும், அந்த வேட்புமனு தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

குஜராத் தேர்தல்: மணக்கோலத்துடன் ஓட்டு போட சென்ற மணமக்கள்

குஜராத் மாநிலத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு காலை எட்டு மணி முதல் நடந்து வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

நடிகர் மயில்சாமி தனிக்கட்சி தொடக்கமா?

கோலிவுட் திரையுலகில் ரஜினி, கமல், விஜய், விஷால் உள்பட பல நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கி அரசியல் களத்தில் குதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.