ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்

  • IndiaGlitz, [Tuesday,January 23 2018]

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர்களையும் விடுதலை செய்யப்படுவார்களா? மாட்டார்களா? என்பதை மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது

ராஜீவ் கொலையாளிகள் இருபது ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்ததால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு கடந்த சில வருடங்களுக்கு முன் முடிவு செய்தது. இதுகுறித்து மத்திய அரசிடம் மாநில அரசு கருத்து கேட்டது. ஆனால் மத்திய அரசு இதுகுறித்து கருத்து கூறுவதற்கு பதிலாக திடீரென சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தது. இதனால் தமிழக அரசு ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது, ராஜீவ் கொலை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிப்பது குறித்து, 3 மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் முடிவெடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

More News

ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிட்ட விவகாரம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரை முன்மொழிந்த தீபக், சுமதி ஆகிய இருவரும் பின்வாங்கியதால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

ரஜினி, கமல் அரசியல் கட்சி தொடங்க மாட்டார்கள்: நாஞ்சில் சம்பத்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருமே அதிகாரபூர்வமாக தங்கள் கட்சியின் பெயரை அடுத்த மாதம் அறிவித்துவிட்டு அரசியல் களத்தில் நேரடியாக குதிக்கவுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

காலையில் தொடங்கி மாலையில் முடியும் கதை தான் சவரக்கத்தி: ஜி.ஆர்.ஆதித்யா

மிஷ்கின், ராம், பூர்ண நடிப்பில் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியுள்ள சவரக்கத்தி' திரைப்பம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.

தளரா மனம் கொண்ட தமிழன் வெற்றி பெற்ற நாள்: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார்.

அமெரிக்காவில் ஒரு நெடுவாசல் போராட்டம்: அர்னால்ட் ஆதரவு

சமீபத்தில் தமிழகத்தின் உள்ள நெடுவாசலில் விளைநிலங்களில் மீத்தேன் எடுக்க மத்திய அரசு முயற்சித்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுக்க எதிர்ப்பு குரல் எழுந்தது