கேப்டன்ஷிப் டாஸ்க்: பாலாஜிக்கு ஒரு ஸ்பெஷல் குறும்படம்

  • IndiaGlitz, [Tuesday,December 01 2020]

நேற்று நடைபெற்ற கேப்டன்ஷிப் டாஸ்க்கில் பாலாஜி, ரமேஷ் மற்றும் ரம்யா கலந்து கொண்ட நிலையில் இந்த டாஸ்க்கின் முடிவில் பாலாஜிக்கு ஏற்பட்ட அதிருப்தியை கேப்டன் என்ற முறையில் ரியோ விளக்கமளித்தார். ஆரி தன்னுடைய கியூப்களை சரியாக எண்ணவில்லை என்றும் மாற்றி மாற்றி கூறியதாகவும், அதனால் இந்த முடிவில் தனக்கு திருப்தி இல்லை என்றும் கூறினார்.

மேலும் மற்றவர்களின் ஒரு க்யூபை கூட தான் தட்டவில்லை என்றும், குறிப்பாக ரமேஷின் சிகப்பு கியூப்களை தான் தட்டவே இல்லை என்றும் பாலாஜி வாதாடினார். என்னுடைய க்யூபை மட்டுமே நான் தட்டினேன் என்று பாலாஜி தொடர்ந்து கூறியபோதிலும் மற்ற கலர் க்யூபும் விழுந்தது என்று ஆரி, ரியோ உள்பட ஒருசிலர் கூறினர் ஆனால் பாலா அதனை ஏற்று கொள்ளவில்லை.

இந்த நிலையில் போட்டியாளர்கள் தவறு செய்துவிட்டு அதனை மறுக்கும்போது அவ்வபோது குறும்படங்கள் போட்டு கடந்த சீசன்களில் அசத்திய கமல்ஹாசன், இந்த சீசனில் 60 நாட்கள் ஆகியும் ஒரேஒரு குறும்படத்தை மட்டுமே போட்டுள்ளார். ஆனால் கமல்ஹாசன் போட மறந்த குறும்படங்களை ஹாட்ஸ்டார் புண்ணியத்தில் நெட்டிசன்களே டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கேப்டன்ஷிப் டாஸ்க்கிலும் பாலா கூறியது தவறு என்பதை குறிக்கும் வகையில் குறும்படங்களை நெட்டிசன்கள் பதிவு செய்துள்ளனர். பாலா தன்னுடைய பச்சை கியூபை தட்டியபோது ரமேஷின் சிகப்பு க்யூப் விழுந்ததையும் பாலாவின் பச்சை க்யூப் வெளியே விழுந்ததையும் குறும்படத்தில் நெட்டிசன்கள் காண்பித்துள்ளனர். இதில் இருந்தே பாலாஜி பொய் சொல்கிறார் அல்லது மறதியாக தவறாக சொல்கிறார் என்பது உறுதியாகியுள்ளது மொத்தத்தில் ரமேஷ் நிஜமாகவே வெற்றி பெற்றுதா இந்த வாரம் கேப்டனாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

வீட்டுக்கு போகணுமா? வின் பண்ணனுமா? அர்ச்சனாவுக்கு வேற லெவல் கேள்வி கேட்ட ஆஜித்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமைதியாக இருக்கும் போட்டியாளர் என்று ஆஜித்தை பலர் விமர்சனம் செய்தாலும் பேச வேண்டிய நேரத்தில் மிகச்சரியாக, சரியான அளவுடன் சொல்ல வேண்டிய

ரஜினிக்கு அரசியலை விட இதுதான் ரொம்ப முக்கியம்: கமல்ஹாசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் என்றும், அந்த சந்திப்பின்போது அரசியலுக்கு வருவது குறித்து

என்னோட கான்செப்ட் இதுதான்: கால்சென்டர் டாஸ்க் குறித்து பாலாஜி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய கால்சென்டர் டாஸ்கில் ஆரி மற்றும் பாலாஜி போன் மூலம் உரையாடும் முதல் புரமோவை ஏற்கனவே பார்த்தோம். பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு

பலமுறை கேலி செய்த அர்ச்சனாவை ஒரே மீம்ஸில் பங்கம் செய்த சுரேஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா நுழைந்த முதல் நாளில் ஒவ்வொருவரைப் பற்றி கருத்துக் கூறிய போது சுரேஷை மட்டும் அவர் படுத்திருந்த விதம் குறித்து கேலி செய்து சிரித்தார்

நடிகர் சிவகுமாருக்கு கொரோனாவா? பதில் சொல்லும் புகைப்படம்!

பழம்பெரும் நடிகரும் நடிகர்கள் சூர்யா கார்த்தியின் தந்தையுமான சிவகுமாருக்கு கொரனோ தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும்