close
Choose your channels

பலமுறை கேலி செய்த அர்ச்சனாவை ஒரே மீம்ஸில் பங்கம் செய்த சுரேஷ்!

Tuesday, December 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா நுழைந்த முதல் நாளில் ஒவ்வொருவரைப் பற்றி கருத்துக் கூறிய போது சுரேஷை மட்டும் அவர் படுத்திருந்த விதம் குறித்து கேலி செய்து சிரித்தார். அதேபோல் கமல்ஹாசன் முன் சக போட்டியாளர் போல் நடித்துக் காட்டும் ஒரு டாஸ்க்கின்போதும், சுரேஷ் படுத்திருந்த விதத்தை கேலி செய்து காட்டினார். இவை அனைத்தும் சுரேஷிஅ வருத்தமடையச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சுரேஷ் படுத்திருந்த்தை கேலி செய்த அர்ச்சனா, தற்போது அவரைபோலவே சோபாவில் படுத்திருந்த ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மீம்ஸை தனது இன்ஸ்டாகிராமில் சுரேஷ் பதிவு செய்துள்ளார். தான் படுத்திருந்த விதம் குறித்து தன்னை பலமுறை கேலி செய்த அர்ச்சனாவை ஒரே ஒரு மீம்ஸ் போட்டு பங்கம் செய்துவிட்டார் சுரேஷ் என ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

மேலும் நீங்கள் பிக்பாஸ் வீட்டை விட்டுச் சென்றதில் இருந்தே நிகழ்ச்சி சுவராசியம் குறைந்துவிட்டது என்றும் சீக்கிரமாக நீங்கள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வாருங்கள் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரசிகர்களின் கோரிக்கையை பிக்பாஸ் நிர்வாகம் ஏற்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.