ஹாலிவுட்டை பார்த்தாலே பயமாக இருக்கிறது… பகீர் கருத்தை வெளியிட்ட 'ஸ்பைடர்மேன்' நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,July 13 2023]

ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் ஸ்பைடர்மேனாக நடித்து உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ஒருவர் ஹாலிவுட் எனக்கானது இல்லை, அது என்னை பயமுறுத்துகிறது என்று கருத்து தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இங்கிலாந்தை சேர்ந்தவரான டாம் ஹாலண்ட் சிறிய வயதிலேயே ஹாலிவுட் சினிமாவிற்குள் நுழைந்தவர். இவரது நடிப்பு விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று பலமுறை விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 18 வயதிலேயே ஸ்பைடர்மேன் திரைப்படத்தில் நடித்து உலகம் முழுக்க பிரபலமான இவர் தொடர்ந்து மார்வெல் திரைப்பட உலகின் முக்கிய நடிகராக வலம் வருகிறார்.

அந்த வகையில் கடந்த 2016 இல் ‘கேப்டன் அமெரிக்க சிவில் வார்‘ தொடர்ந்து 2017 இல் ‘ஸ்பைடர்மேன் , ஹோம்கம்மிங்‘, 2018 இல் ‘அவென்ஜர்ஸ்-இன்பினிட்டி வார்‘, 2019 இல் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், ஸ்பைடர் மேன்-பார் பிரம் ஹோம்‘ என்று ஹாலிவுட் சினிமாவில் பட்டையை கிளப்பி வருகிறார். மேலும் 27 வயதான இவர் பிரபல மாடலும் தன்னுடைய நடித்த நடிகையுமான ஜெண்டயா என்பவரை காதலித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் ஆன் பர்பஸ் வித் ஜே ஷெட்டி போட்காஸ்டில் பேசிய நடிகர் டாம் ஹாலண்ட் ‘நான் திரைப்படம் தயாரிப்பின் மிகப்பெரிய ரசிகன். ஆனால் எனக்கு ஹாலிவுட் பிடிக்கவில்லை. அது எனக்கானது அல்ல. அதன் வியாபார உத்தி என்னை பயமுறுத்துகிறது. நானும் அந்த வியாபாரத்தின் ஒரு அங்கம்தான் என்பதை அறிவேன். அதனுடனான தொடர்புகளை ரசிக்கிறேன். ஆனால் அதை என்னிடமிருந்து விலக்கி வைப்பதற்கான வழிகளை எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

முடிந்தவரை ஒரு சராசரி வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். எனக்கு முன்னால் வந்த எத்தனையோ பேர் தங்களின் சுய அடையாளத்தை இழந்ததைப் பார்த்திருக்கிறேன். என்னுடன் வளர்ந்த நண்பர்கள் யாரும் இப்போது எனக்கு நண்பர்களாக இல்லை. காரணம் நான் என்னை இந்த வியாபாரத்தில் இழந்துவிட்டேன். என் குடும்பம் என் நண்பர்கள் என என்னை மகிழ்விக்கும் விஷயங்களில் கவனம் செலுத்த ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய சொந்த வாழ்க்கையை குறித்து பேசிய டாம் ஹாலண்ட், என் வாழ்க்கையில் ஜெண்டயாவைப் போன்ற ஒருவர் இருப்பது எனக்கு அதிர்ஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதைத்தவிர தன்னுடைய குடிப்பழக்கம் குறித்து பேசிய அவர் குறைந்தது ஆறு மாதங்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து வெளிவர முயற்சித்தேன். அந்த நாட்களில் ஆரோக்கியமான உணர்ந்தேன். உடற்தகுதியுடன் இருப்பதைப் போன்றும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைப் போன்றும் உணர்ந்தேன் என்று நடிகர் டாம் ஹாலண்ட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஹாலிவுட் சினிமாவில் நடக்கும் வியாபார உத்தி என்னை பயமுறுத்துகிறது, அதைவிட்டு விலகியிருக்க முயற்சிக்கிறேன் என்று பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்துவரும் நடிகர் டாம் ஹாலண்ட் கூறியிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது.
 

More News

மனித கறியை ருசித்து சாப்பிட்ட ஆசாமிகள்… போலீசார் கைது!

ஒடிசா மாநிலத்தில் தகன மேடையில் எரிந்துகொண்டிருந்த மனித கறியை சாப்பிட்டுவிட்டு மது அருந்திய இரண்டு பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

'மாவீரன்' படம் பார்த்த அமைச்சர் உதயநிதி.. என்ன கமெண்ட் போட்டிருக்காரு பாருங்க..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் நேற்று சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

ஒரு பாலியல் குற்றவாளியை முதல்வர், வீட்டுக்கு சென்று வாழ்த்துவதா? சின்மயி ஆவேசம்..!

கவிஞர் வைரமுத்து இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவருடைய வீட்டுக்கு சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பிக் பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் ஜோடியாக அனிகா சுரேந்திரன்... இயக்குனர் யார் தெரியுமா?

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' 'விஸ்வாசம்' போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிதா சுரேந்திரன் தற்போது சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

சாயிஷாவின் குட்டிப்பாப்பா ஆடும் செம்ம டான்ஸ்.. க்யூட் வீடியோ வைரல்..!

நடிகை சாயிஷா தனது செல்ல மகள் குட்டி பாப்பா டான்ஸ் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த க்யூட் வீடியோவுக்கு லைக் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.