உங்கள் படங்களுக்கு அழிவே இல்லை: மகேந்திரன் மறைவிற்கு பிரபலங்கள் இரங்கல்

  • IndiaGlitz, [Tuesday,April 02 2019]

பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். அவருடைய மறைவு தமிழ்த்திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பிரபல திரை நட்சத்திரங்கள் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்: காலத்தால் அழியாத சினிமாக்களை உருவாக்கிய மகேந்திரன் மறைவு செய்தியை கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். நீங்களும் உங்கள் படங்களும் எங்கள் நெஞ்சங்களில் என்றுமே வாழ்ந்து கொண்டிருக்கும். அதற்கு அழிவே இல்லை.

இயக்குனர் அஹ்மது: மகேந்திரன் அவர்களது மரணம் மிகப்பெரிய துயரம். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம்: மகேந்திரன் குறைவாகத்தான் பேசுவார். ஆனால் அவருடைய படம் நிறைய பேசும். அவருடைய படங்கள் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்ப்ரேஷன். உதிரிப்பூக்கள் படம் பார்த்து பல நாட்கள் நான் தூங்காமல் இருந்துள்ளேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்

இயக்குனர் வெற்றிமாறன்: காலம் கடந்தும் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர் மகேந்திரன். பல இயக்குனர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர். செய்யும் தொழிலில், எந்த ஒரு சமரசமும் செய்துகொள்ளாமல் பணியாற்றியவர். 

இயக்குனர் ரஞ்சித்: இயக்குனர் மகேந்திரன் எளிமை தான் உங்கள் இலக்கு. திரைவிமர்சனம் எழுதியது மட்டும் இல்லாமல் எது கலைத்தன்மையோடு வெகு சன மக்களை கவர்ந்திழுக்கும் சினிமா என்று “உதிரி பூக்கள்” முள்ளும் மலரும்” போன்ற படங்களை எடுத்து காட்டிய அதிசயம் நீங்கள். ஐயா உம் படைப்புகள் எப்போதும் வாழும்.

More News

பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் காலமானார்!

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார். அவருக்கு வயது 79

விஜய்சேதுபதியை கைது செய்ய வேண்டும்: திருநங்கைகள் போர்க்கொடி

நடிகர் விஜய்சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் விஜய்சேதுபதியின் திருநங்கை நடிப்பை அனைவரும் பாராட்டினர்.

வெளியானது ஏ.ஆர்.ரஹ்மானின் 'மார்வெல் ஆன்ந்தம்': ரசிகர்கள் குஷி

அவென்சர்ஸ் பட வரிசைக்கு என உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது தெரிந்ததே. அந்த வகையில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படம் வெளியாகவுள்ளது.

'தளபதி 63' படத்தில் நடிக்கும் அதே கேரக்டரில் மீண்டும் கதிர்! 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையம்சம் கொண்ட படம் என்பது தெரிந்ததே.

மாஸ் ஹீரோவின் அடுத்த படத்தில் பாரதிராஜா

இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் இயக்கவில்லை என்றாலும் ஒருசில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.