மீண்டும் ஒரு ஆணவக்கொலை: மகளை சாம்பலாக்கி நீரில் கரைத்த கொடூர பெற்றோர்

  • IndiaGlitz, [Monday,December 24 2018]

உடுமலையில் கவுசல்யாவின் கணவர் சங்கர், தெலுங்கானாவில் அம்ருதாவின் கணவர் பிரணாய் என அவ்வப்போது ஆணவக்கொலைகள் நடந்து கொண்டிருப்பது நம் நாட்டில் வாடிக்கையாகிவிட்டது. படிப்பறிவு, நாகரீகம் முன்னேறினாலும் இன்னும் ஜாதி என்ற பிசாசை கட்டியழும் பெற்றோர்கள் ஒருசிலர் இருப்பதால் இந்த ஆணவக்கொலை நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்திலும் ஒரு ஆணவக்கொலை நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளத்.

ஆந்திர மாநிலத்தில் மஞ்சிரியாலா மாவட்டத்திலுள்ள ஜன்னாரம் மண்டலம் தலமடுகு என்ற கிராமத்தை சேர்ந்த அனுராதா என்ற இளம்பெண் லட்சுமி ராஜன் என்பவரை காதலித்து வந்தார். இந்த காதல் அனுராதாவின் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததும் லட்சுமிராஜன் வேறு ஜாதி என்பதால் அவர்கள் இந்த காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் அனுராதா-லட்சுமிராஜன் காதல் ஜோடி கடந்த 3ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த விஷயத்தை அறிந்த அனுராதாவின் பெற்றோர், அனுராதாவை தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்து அடித்து துன்புறுத்தினர். ஒரு கட்டத்தில் ஜாதிவெறி தலைக்கு ஏற மகள் என்றும் பாராமல் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தினர். அதோடு வெறி அடங்காமல் அனுராதாவின் சாம்பலை எடுத்து அருகில் இருந்த நீர்நிலையில் கரைத்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அனுராதாவின் பெற்றோர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

டிரிம் செய்யப்பட்ட சீதக்காதி: புதிய ரன்னிங் டைம் அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் கடந்த 20ஆம் தேதி வெளியான 'சீதக்காதி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பும், பாசிட்டிவ் விமர்சனங்களும் கிடைத்தது

கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது: ரஜினியை கலாய்த்த பெட்டிக்கடைக்காரர்

ஒருசில கடைகளில் கடன் கிடையாது என்பதை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக அதே நேரத்தில் சுவாரஸ்யமாக அறிவிப்பு பலகை மூலம் கூறுவதுண்டு.

உதயநிதியின் 'கண்ணே கலைமானே' ரிலீஸ் குறித்த தகவல்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகிய 'கண்ணே கலைமானே' திரைப்படத்தின் சிங்கிள் பாடலை இன்று மாலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளார் என்பது தெரிந்ததே

மோடி, ராகுல்காந்தி வரிசையில் இடம் பிடித்த தளபதி விஜய்

சமூக வலைத்தளங்களில் முன்னணியில் உள்ள டுவிட்டரில் இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட இந்திய நபர்கள் குறித்த பட்டியல் ஒன்றை டுவிட்டர் வெளியிட்டுள்ளது.

ரஜினி எந்த கட்சியின் வாக்குகளை பிரிப்பார்: அமைச்சர் ஜெயகுமார் தகவல்

ரஜினி, கமல் தேர்தலில் போட்டியிட்டாலும் அதிமுக ஓட்டு வங்கிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்