'பாகுபலி 2' குறித்த பத்து ஆச்சரியமான செய்திகள்

  • IndiaGlitz, [Saturday,April 29 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் குறித்து ஊடகங்களும், பொதுமக்களும் இன்னும் சில நாட்கள் பேசிக்கொண்டிருப்பார்கள் என்று தான் தோணுகிறது. நேற்றிலிருந்து யாரை பார்த்தாலும் பாகுபலி பார்த்தாச்சா? என்ற கேள்விதான் முதலில் எழுகிறது. அந்த அளவுக்கு இந்த படம் பொதுமக்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாகுபலி 2' படத்தால் பரபரப்பான செய்திகள் சிலவற்றை பார்ப்போம்
1. ஜவுளிக்கடைகளில் 'பாகுபலி' சேலை தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. பிரபாஸ், அனுஷ்கா படங்களுடன் கூடிய முந்தானையில் அழகிய சேலைகள் பல முன்னணி ஜவுளிக்கடைகளில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
2. அதேபோல் பாகுபலி நகைகளும் வந்துவிட்டது. 'பாகுபலி 2' படத்திற்காக நகைகள் செய்து கொடுத்த ஐதராபாத்தை சேர்ந்த முன்னணி ஜூவல்லர்ஸ் ஒன்று இரண்டு வகையான டிசைன்களில் 'பாகுபலி' பெயரில் நகைகள் அறிமுகம் செய்துள்ளதாம்
3. இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையையும் வசமாக்கியுள்ளது.
4. 'பாகுபலி 2' படத்தைப் பார்க்க இணையதளம் வாயிலாக அட்வான்ஸ் புக்கிங் செய்தவர்களின் எண்ணிக்கை பாலிவுட் சூப்பர் ஹிட் படமான அமீர்கானின் 'டங்கல்' படத்தை மிஞ்சி முதலிடம் பிடித்துள்ளது
5. புக் மை ஷோ' ஆன்லைன் தளத்தில் 'பாகுபலி 2' படத்தின் டிக்கெட்டுகள், ஒரு நொடிக்கு 12 டிக்கெட்டுகள் ஆன்லைனில் புக் செய்யப்படுகிறதாம்.
6. அனேகமாக இதுவரை ஒரு ஊடகம் கூட எதிர்மறை விமர்சனம் செய்யாத படம் 'பாகுபலி 2' படமாகத்தான் இருக்கும் என்று கருதப்படுகிறது
7. மும்பை போலீஸ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இரண்டு கேள்விகளை தங்களது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த கேள்விகள் இவைகள்தான். 1.கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? 2. பொதுமக்கள் ஏன் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை?
8. பாகுபலி 2 படம் வெளியாவதற்கு முன்பே முன்பதிவுகள் மூலம் ரூ.500 கோடியை அள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களில் உள்ள திரையரங்குகளில் வரும் திங்கட்கிழமை வரை டிக்கெட் இல்லை
9. டோலிவுட்டில் 4K HD தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் படம் 'பாகுபலி 2' திரைப்படம் தான்
10. 'சந்திரலேகா' திரைப்படம் வெளிவந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும் இன்னும் அந்த படத்தின் பிரமாண்டமான கிளைமாக்ஸ் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதேபோல் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலும் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் உள்ள போர்க்காட்சிகள் பேசப்பட்டு வரும் என்று நம்பப்படுகிறது

More News

'பாகுபலி 2' கொண்டாடப்படுவதற்கு பிரபல இயக்குனர் கண்டனம்

பிரமாண்டம் என்றால் உண்மையில் என்ன என்பதை நேற்று உலகம் முழுவதும் திரையில் ரசிகர்களின் கண்முன் நிறுத்திய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியை உலகமே கொண்டாடி வருகிறது. அவர் ஒரு தெலுங்கு பட இயக்குனராக இருந்தாலும் மத, இன அடையாளங்களை கடந்து அவரை அனைவருமே ஒரு இந்திய இயக்குனராகவே கருதுகின்றனர்...

மனைவியுடன் சென்று இளையதளபதியை சந்தித்த பிரபல இயக்குனர்

இளையதளபதி விஜய் நேற்றும் இன்றும் ஈசிஆர் சாலையில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார்...

கொடநாடு கொலை வழக்கில் தேடப்பட்ட மற்றொரு நபருக்கும் விபத்து.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி பலியானதை சற்று முன்னர் பார்த்தோம்...

அஜித்தின் 46வது பிறந்த நாள்: 46 அபூர்வ தகவல்கள்

அஜித்! இந்த ஒற்றை சொல்லுக்கு இருக்கும் சக்தி அளப்பறியது.

கொடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம். தேடப்பட்ட ஜெ.வின் கார் டிரைவர் மர்ம மரணம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை ஐந்து தனிப்படைகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்...