'பாகுபலி 2' படத்துக்கு ராஜமெளலியின் சம்பளம் ரூ.100 கோடியா?

  • IndiaGlitz, [Sunday,April 30 2017]

பிரமாண்ட இயக்குனரின் பிரமாண்ட திரைப்படமான 'பாகுபலி 2' படத்தின் சுனாமி இன்னும் ஊடகங்களில் நிற்கவில்லை. சினிமாவின் மீது விருப்பமே இல்லாதவரையும் இந்த படம் பார்க்க வைத்துவிட்டது. இந்தியா முழுவதையும் பேச வைத்துவிட்ட இந்த படத்தின் உருவாக்கத்திற்கு ஒரே காரணம் இயக்குனர் ராஜமெளலியும் அவருடைய குடும்பமும்தான்.

பிரபாஸ், அனுஷ்கா இல்லாமல் கூட இந்த படத்தை உருவாக்கிவிடலாம். ஆனால் ராஜமெளலி இல்லாமல் இந்த படம், சான்ஸே இல்லை. அந்த அளவுக்கு அவருடைய ஐந்து வருட உழைப்பு இந்த படத்தில் கொட்டி கிடக்கின்றது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் இந்த படத்திற்கான ராஜமெளலியின் சம்பளம் ரூ.100 கோடி என்ற செய்தி பரவி வருகிறது. ரூ.250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெகுவிரைவில் ரூ.1000 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ராஜமெளலிக்கு ரூ.100 கோடி சம்பளம் என்பது பொருந்தக்கூடிய ஒன்றுதான். இந்த செய்தி மட்டும் உண்மையாக இருந்தால் பாலிவுட்டின் 'கான்' நடிகர்களை எல்லாம் நம் தென்னிந்திய கலைஞர் தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்பது உண்மையாகும்.

More News

ரஜினிக்கு 'சந்திரமுகி', விஜய்க்கு 'தளபதி 61'. தயாரிப்பாளர் முரளி ராமசாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று 'சந்திரமுகி'. குறிப்பாக 'பாபா' என்ற தோல்வி படத்திற்கு பின்னர் ரஜினி மீது பல எதிர்மறை விமர்சனங்கள் எழுந்த நிலையில், தான் யானை இல்லை குதிரை, விழுந்தா டக்குன்னு எழுந்திருச்சிருவேன்' என்று சொன்னதை செய்து காட்டிய படம் 'சந்திரமுகி. இந்த படம் சென்னை ச

விருது பெற்ற குழந்தை நட்சத்திரத்தின் வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்றிய விஜய்

இளையதளபதி விஜய் கடந்த இரண்டு நாட்களாக ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். நேற்று இயக்குனர் ரவிகுமார் உள்பட பல பிரபலங்களும், ரசிகர்களும் விஜய்யுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்...

'விவேகம்' படத்தின் செகண்ட் லுக் இதுதானா?

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி தெறிக்க வைத்தது. உலகம் முழுவதிலும் உள்ள அஜித் ரசிகர்கள் ஃபர்ஸ்ட்லுக்கை இரண்டு நாட்கள் டுவிட்டர் டிரெண்டில் வைத்திருந்தனர்...

இனி இந்திய சினிமா 'பாகுபலிக்கு முன் - பாகுபலிக்கு பின்' என்று பார்க்கப்படும். ராம்கோபால் வர்மா

நேற்று வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஒரு தென்னிந்திய படத்திற்கு கிடைத்த வரவேற்பால் பாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்...

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ.3 லட்சம் கொடுத்த பிரபல நடிகை

நடிகர் சங்க தேர்தலின்போது விஷால் அணியினர் கொடுத்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமிருந்த ஒரே வாக்குறுதியான நடிகர் சங்கத்திற்கு என சொந்தமாக கட்டிடம் கட்டும் பணியும் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது...