10ஆம் வகுப்பு மாணவனை கடத்தி குடும்பம் நடத்திய இளம்பெண் மீது பாய்ந்த போக்சோ சட்டம்

  • IndiaGlitz, [Friday,September 21 2018]

பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் சமீபத்தில் இயற்றப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 22 வயது பெண் மீது போக்சொ சட்டம் பாய்ந்துள்ளது.

தர்மர்புரி அருகே 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் மீது காதல் கொண்ட 22 வயது இளம்பெண் அந்த சிறுவனை கடத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுவனை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிறுவனையும் ஒரு இளம்பெண்ணையும் பெங்களூரில் பார்த்ததாக உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின்படி போலீசார் துணையுடன் சிறுவனின் பெற்றோர் பெங்களூர் சென்றனர். அங்கு ஒரு வீட்டை வாடகை எடுத்து சிறுவனுடன் ஒரு இளம்பெண் குடும்பம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் இருவரையும் தமிழகத்திற்கு அழைத்து வந்த போலீசார் இருவரிடமும் தனித்தனியே விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுவன் மீது கொண்ட காதலால் அவனை கடத்தி தனிவீடு எடுத்து குடும்பம் நடத்தியதாக இளம்பெண் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் இளம்பெண்ணை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

More News

தனுஷின் 'வடசென்னை' டிராக் லிஸ்ட் வெளியீடு

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

கருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது: கமல்ஹாசன்

நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் காவல்துறை அதிகாரி ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும்,

கருணாஸ் பேச்சு ஆச்சரியம் அளிக்கின்றது: நடிகர் கார்த்திக் கருத்து

கருணாஸ் தம்பி அப்படி பேசியிருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது. ஆனால் ஒன்று நான் சொல்லி கொள்வது என்னவென்றால் தமிழத்தில் வீரர்களுக்கு குறைவில்லை.

இரு சகோதரிகளின் மனவலி: ஆணவக்கொலை குறித்து ஜிவி பிரகாஷின் பதிவு

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆணவக் கொலை காரணமாக கெளசல்யா என்ற பெண்ணின் கணவர் சங்கரை அவரது குடும்பத்தினர்களே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருணாசுக்கு தைரியம் இருந்தால் என்னை அடிக்கட்டும்: அதிமுக எம்எல்ஏ சவால்

சமீபத்தில் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய காமெடி நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், 'நான் அடிப்பேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே பயந்தார்'