close
Choose your channels

தனுஷின் 'வடசென்னை' டிராக் லிஸ்ட் வெளியீடு

Friday, September 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது. சந்தோஷ்குமார் இசையில் இந்த படத்தில் 8 பாடல்கள் உள்ளது.

1. 'சந்தநாதா' என்று தொடங்கும் பாடலை கா.கா.பாலசந்தர் மற்றும் கானா பாலா பாட இந்த பாடலை கானா பாலா எழுதியுள்ளார்.

2. கோவிந்தம்மாவல்ல' என்ற பாடலை தனுஷ் பாட, ரோகேஷ் எழுதியுளார்.

3. கார்குழலி கடவாயே என்ற பாடலை விவேக் எழுத, இந்த பாடலை ஸ்ரீராம், விஜய் நரேன், அனந்து, சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார் ஆகியோர் பாடியுள்ளனர்.

4. மடியில நிற்கிற மான்குட்டி' என்ற பாடலை கானாபாலா எழுதி அவரும் தீ என்பவரும் பாடியுள்ளனர்.

5. 'என்னடி மாயாவி நீயே' என்ற பாடலை சித்ஸ்ரீராம் பாட, விவேக் எழுதியுள்ளார்.

6. எப்படியெம்மா' என்ற பாடலை சிந்தை ரவி எழுதி பாடியுள்ளார்.

7. மதியா சேரலையா' என்ற பாட்லை அறிவு எழுதி பாடியுள்ளார்.

8. அலங்கார பந்தல்' என்ற பாடலை தோலக் ஜெகன் எழுதி பாடியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.