11 வித்தியாசமான கெட்டப்பில் 'காஷ்மோரா' கார்த்தி?

  • IndiaGlitz, [Sunday,September 20 2015]

மெட்ராஸ், கொம்பன் வெற்றி படங்களை அடுத்து கார்த்தி தற்போது நாகார்ஜுனனுடன் 'தோழா' மற்றும் நயன்தாராவுடன் 'காஷ்மோரா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்திலும் கார்த்தி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 'காஷ்மோரா' படத்தில் கார்த்தி 11 வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கவுள்ளதாகவும் இந்த 11 கெட்டப்புகளையும் 11 விதமான செட்களில் படமாக்க இயக்குனர் கோகுல் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் கோகுல் ஏற்கனவே இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'காஷ்மோரா' படத்திற்காக மூன்று செட்கள் தற்போது தயாராகி அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் மீதி 8 செட்கள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா ஒரு முக்கிய கேரக்டரிலும், கார்த்தியின் தந்தையாக காமெடி நடிகர் விவேக்கும் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும், சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

More News

விஜய்-அஜீத்தை பின்னுக்கு தள்ளினாரா பிரசாந்த்?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் முதல் படமான 'ஜெண்டில்மேன்' படத்தில் இருந்து 'காதலன்', 'இந்தியன்', 'ஜீன்ஸ்' மற்றும் முதல்வன்' ஆகிய படங்களில் அவருக்கு உதவியாளராக இருந்தவர் இயக்குனர் மாதேஷ்...

வரதட்சணை புகாரில் சிக்கிய 'யட்சன்' நடிகரின் உருக்கமான கடிதம்

அலிபாபா, கழுகு, மற்றும் சமீபத்தில் வெளியான 'யட்சன்' போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் கிருஷ்ணா, தனது மனைவி ஹேமலதாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யவுள்ளதாகவும், இந்த வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் செய்திகள் ஏற்கனவே வெளிவந்து கொண்டிருக்கிறது...

நயன்தாராவின் 'மாயா'வுக்கு சர்வதேச அங்கீகாரம்?

அஸ்வின் இயக்கத்தில் நயன்தாரா நடித்த 'மாயா' திரைப்படம் நேற்று முன் தினம் ரிலீஸாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது...

கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா?

நடிகர் ஆர்யா நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான 'மீகாமன்', 'புறம்போக்கு', 'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க', 'யட்சன்' ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சூப்பர் ஹிட் ஆகவில்லை....

விஜய்க்கு டிரைவர் ஆனாரா 'நான் கடவுள்' ராஜேந்திரன்?

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.....