இன்று ஒரே நாளில் 15 பேர்: கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பிடித்தது சென்னை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 671 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்றும் சற்று முன்னர் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்ததை பார்த்தோம்.

இந்த நிலையில் மாவட்ட வாரியாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதில் சென்னை மாவட்டம் இன்றும் முதலிடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே சென்னையில் 95 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 15 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 110 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தை சென்னை பிடித்துள்ளது. சென்னையை அடுத்து கோவையில் 59 பேர்களும், திண்டுக்கல்லில் 45 பேர்களும் நெல்லையில் 38 பேர்களும், ஈரோட்டில் 32 பேர் பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. மிகக் குறைந்தபட்சமாக பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நிறைமாத கர்ப்பிணிகளுக்கு இலவச வாகன சேவை செய்யும் சென்னை இளைஞர்

ஊரடங்கு உத்தரவு நேரத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உதவி சரியாக கிடைக்காத நிலையில் சென்னையில் இளைஞர் ஒருவர் இலவச வாகன சேவை செய்து வருகிறார்.

இன்று கொரோனாவால் பாதித்தவர்கள் எத்தனை பேர்? பீலா ராஜேஷ் தகவல் 

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ரசிகர்கள் செய்த மகத்தான உதவி

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் கொடூரமாக பரவி வரும் நிலையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தூய்மை பணிகளில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களின் மதிப்பு பலருக்கு

பிரபல தயாரிப்பாளரின் மகளுக்கு கொரோனா பாசிட்டிவ்: தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி என்பவர் ஷாருக்கான் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' 'தில்வாலே' 'ஹாப்பி நியூ இயர்' 'ரா ஒன்' உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார்.

கொரோனா தாக்கி இருக்குமா என்ற பயத்தில் தற்கொலை செய்த பெண்: பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பஞ்சாபை சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் தனக்கு தொண்டை வலி இருந்ததால் கொரோனா வைரஸ்