குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா பணிக்குத் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி: ஆச்சரிய தகவல் 

  • IndiaGlitz, [Tuesday,October 13 2020]

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா பணிக்கு திரும்பி கைக்குழந்தையுடன் பணி செய்து கொண்டிருக்கும் புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த காசியாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் சௌமியா பாண்டே. இவர் சமீபத்தில் கொரோனா தடுப்பு அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கர்ப்பிணியாக இருந்த சௌம்யாவுக்கு செப்டம்பர் மாதம் இறுதியில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த இரண்டே வாரங்களில் அவர் தனது பிரசவ விடுமுறையை முடித்துவிட்டு கைக்குழந்தையுடன் அலுவலகத்திற்கு வந்துள்ளது அனைவரைக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இது குறித்து செளம்யா பாண்டே கூறியபோது ’நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அதனால் எனது பணியை நான் கண்டிப்பாக செய்ய வேண்டும். கொரோனா பாதிப்புகளால் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் குழந்தையை கவனிப்பதற்கும் தேவையான வலிமையை பெண்களுக்கு கடவுள் வழங்கியுள்ளார். எனது குழந்தையையும் நிர்வாக பணியையும் கடவுளின் அருளால் என்னால் கவனித்துக் கொள்ள முடியும். மாவட்ட நிர்வாகம் என்பது எனது குடும்பம் போன்றது. எனது குடும்பத்தினர் கொரோனா காலத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது நான் என்னுடைய பணிகளை தொடர்ந்து செய்வதே சரியானதாக இருக்கும்’ என்றும் அவர் கூறியுள்ளார், குழந்தை பெற்ற 14 நாட்களில் பணிக்கு திரும்பியுள்ள ஐஏஎஸ் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

தோனிக்காக வீட்டை மஞ்சள் நிறமாக மாற்றிய வெறித்தனமான ரசிகர்!

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. தல தோனி உள்பட சென்னை அணியின் வீரர்கள் ஒட்டுமொத்தமாக சொதப்பி வருகின்றனர்.

முதல்வர் தாயார் மறைவு: பிரபல நடிகர் இரங்கல் அறிக்கை!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் அவர்கள் இன்று காலை காலமான நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எவிக்சனில் திடீர் திருப்பம்: மக்களின் வாக்குகளை மாற்றி அமைக்கும் சக்தி

இந்த வார நாமினேஷன் படலம் நேற்று தொடங்கிய நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எட்டு பேர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி கேப்டன் என்பதால் அவரது பெயர் நாமினேஷன் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

ரூபாய் நோட்டில் கொரோனா வைரஸா??? பதைக்க வைக்கும் தகவல்!!!

கடந்த பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் பொருட்களின் மீது 3 நாட்கள் வரையிலும் தங்கியிருக்கும் என்ற அறிவிப்பை அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் வெளியிட்டு இருந்தது.

தமிழக முதல்வரின் தாயார் காலமானார்: துணை முதல்வர் ஆறுதல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் என்பவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 93