18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு: என்னென்ன சாத்தியம்?

  • IndiaGlitz, [Thursday,October 25 2018]

சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,. இந்த தீர்ப்பால் என்னென்ன நடக்க சாத்தியம் என்பதை தற்போது பார்ப்போம்.

*தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்தால் சட்டமன்ற எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 214ஆக மாறும். ஆட்சி அமைக்க 108 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் 109 பேர் இருப்பதால் ஆட்சிக்க்கு ஆபத்து இல்லை.

* தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் சட்டமன்ற எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 232 ஆக மாறும். ஆட்சி அமைக்க 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் 109 பேர் மட்டுமே இருப்பதால் ஆட்சி கவிழும் வாய்ப்பு உள்ளது.

* தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மேல்முறையீடு செய்து, தீர்ப்புக்கு இடைக்கால தடை பெற்றால், தற்போதைய நிலையே தொடரும்.

* தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வெளிவந்தால் 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அப்போதும் இப்போதைய நிலையே தொடரும்.

* தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வந்து, முதல்வரால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாவிட்டால் தினகரன் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்.

* தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்து இரு தரப்பினர்களும் தீர்ப்பை ஏற்று கொண்டால் விரைவில் 18 தொகுதி மற்றும் காலியாக இருக்கும் 2 தொகுதிகள் என மொத்தாம் 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும்.

மேற்கண்ட வாய்ப்பு தவிர இன்னும் ஒருசில வாய்ப்புகள் இருப்பதால் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

கூத்துப்பட்டறை முத்துசாமி மரணம்: நடனமாடி அஞ்சலி செலுத்திய நடிகர்கள்

கூத்துப்பட்டறையின் நிறுவனர் நா.முத்துசாமி அவர்கள் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. தமிழ் திரையுலகில் இன்று பிரபல நட்சத்திரங்களாக உள்ள விஜய்சேதுபதி, விமல், பசுபதி உள்பட

சச்சின் சாதனையை முறியடித்தார் விராத் கோஹ்லி

கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்று போற்றப்படும் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை இன்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி முறியடித்து புதிய உலக சாதனை ஏற்படுத்தியுள்ளார்.

சபரிமலை விவகாரம்: பாத்திமாவை பந்தாடிய பி.எஸ்.என்.எல்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து கடந்த வாரம் ஐயப்பன் சன்னிதானம் திறக்கப்பட்டதும் பல பெண்கள் கோவிலுக்கு செல்ல முயன்றனர்.

சந்தானம் நடிக்கும் புதிய படத்தில் பாலிவுட் நாயகி

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கொடிகட்டி பறந்த நடிகர் சந்தானம், ஹீரோவாக மாறிய பின்னர் காமெடி வேடங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

பத்து மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பேன்: பாஜக எம்பி அதிரடி

பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இந்த தீர்ப்பின்படி பட்டாசு தயாரிக்கவோ அல்லது பயன்படுத்தவோ தடை விதிக்க முடியாது