close
Choose your channels

சந்தானம் நடிக்கும் புதிய படத்தில் பாலிவுட் நாயகி

Wednesday, October 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கொடிகட்டி பறந்த நடிகர் சந்தானம், ஹீரோவாக மாறிய பின்னர் காமெடி வேடங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக சந்தானம் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இருப்பினும் அவர் தற்போது நான்கு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று அவர் மேலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. சந்தானம் நடிக்கும் புதிய படத்தை ஜான்சன் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக பாலிவுட் நடிகை தாரா அலிஷாபெர்ரி என்பவர் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் யாதின் கார்யகேர் என்ற பாலிவுட் நடிகரும் நடிக்கவுள்ளார். இவர் 'பாஜிராவ் மஸ்தானி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ் நாராயண் என்பவர் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது இந்த நிலையில் சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.