தாலி கட்டிய சில நிமிடங்களில் தற்கொலை: 19 வயது காதல் ஜோடியின் விபரீத முடிவு

  • IndiaGlitz, [Thursday,August 06 2020]

தாலி கட்டிய சில நிமிடங்களில் 19 வயது காதல் ஜோடி கோவில் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரியூர் என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் அதே பகுதியை கவிதா என்ற பெண்ணை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீட்டிலும் இந்த காதலுக்கு சம்மதம் கிடைக்கவில்லை

இதனை அடுத்து காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து ஊரின் ஒதுக்குப் புறத்தில் உள்ள ஒரு அம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு குமார் தனது காதலி கவிதாவின் கழுத்தில் தாலி கட்டினார். அதன் பின்னர் இருவரும் அந்த கோவிலின் இரும்பு கேட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர்

கோவில் கேட்டில் ஒரு ஆணும் பெண்ணும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த கிராமத்து மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்

இந்த விசாரணையில் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாகவும் ஆனால் பெற்றோர் சம்மதம் கிடைக்காததால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிய வந்தது. ஆனால் அதே நேரத்தில் இது தற்கொலையா அல்லது யாரேனும் கொலை செய்து விட்டு தூக்கில் தொங்க விட்டு விட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

More News

முடிவுக்கு வந்தது விவோ ஸ்பான்ஸர்: பிசிசிஐ அறிவிப்பு

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் ஸ்பான்சர் கூட்டணியில் இருந்து விவோ விலகியிருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது

மாநில முதல்வருக்கு வாழும் காலத்திலேயே கோவில் கட்டும் எம்எல்ஏ!!! பரபரப்பு தகவல்!!!

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளும் கட்சி எம்எல்ஏவான தலாரி வெங்கட்ராவ் கோவில் கட்ட இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

திவாலாகி விடுவோம் போல… பாதுகாப்பு வேணும்… நிதிமன்றத்தை நாடியிருக்கும் பிரபல விமான நிறுவனம்!!!

அமெரிக்காவில் இயங்கிவரும் பிரபல விமான சேவை நிறுவனமான விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு விசித்திரமான மனு ஒன்றை அளித்து இருக்கிறது.

கொரோனாவில் இருந்து விடுபட்ட நூற்றுக்கு 90 சதவீதம் பேருக்கு இந்த குறைபாடு இருக்கு… பகீர் தகவல்!!!

கடந்த டிசம்பர் மாத இறுதியில் முதன்முதலாக வுஹான் மாகணத்தின் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா பரவியதாகக் கூறப்படுகிறது.

லெபனான் போன்று சென்னைக்கும் ஆபத்தா??? அதிர்ச்சியை ஏற்படுத்தும் பகீர் தகவல்!!!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தால் இதுவரை 138 பேர் உயிரிழந்துள்ளனர்